செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

சீமான் மறுத்த கான்ட்ராக்டை நெடுமாறன் கைப்பற்றினார் நெடுமாறன் பறக்கவிட்ட டாலர் பலூன்

 சீமான் :  மாவீரர் தினத்தன்று எனக்கு ஓர் அழைப்பு. லண்டனில் இருந்து பேசிய ஒருவர் என்னிடம், ‘அண்ணன் இருக்கிறார் என்று நீங்கள் மேடையில் சொல்ல வேண்டும்’ என்று என்னிடம் கேட்டார்கள்!.
அதாவது சீமானை இப்படி கூறுமாறு புலம்பெயர் புலி வசூல் சக்கரவர்த்திகள் நெடுமாறன் மூலம் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளார்.
எல்லாம் வசூல் டெக்னீக்தான்
நெடுமாறன் பறக்க விட்ட பலூனை உண்மை என்று நம்பி மகிழ்சியை வெளிப்படுத்தும் அத்தனை சில்லறைகளுக்கும்  ஒரு ஆலோசனை!
ஏன் மிச்சம் மீதி உள்ள ஈழத்தமிழர்களையும் கொல்லவா?
உங்கள் தலைக்குள் இவ்வளவு களிமண் இருக்கிறது என்பது உண்மையிலே அதிர்ச்சியாக இருக்கிறது.   உங்கள் சிந்தையில் இருப்பது அத்தனையும் பொய்தானோ என்ற சந்தேகம் வருகிறது.
நல்ல பல வரலாற்று செய்திகளையும் கருத்துக்களையும் கூறும் நீங்கள் இப்படி ஒரு பாசிஸ்டுக்கு பல்லக்கு தூக்குவது எந்த வகையில் சேர்த்தி?
அறம் என்பது உங்களுக்கு கொஞ்சம் கூட இல்லையா?
இவ்வளவு கறைபடிந்த நெஞ்சொடு எப்படி உங்களால் நிம்மதியாக தூங்க முடிகிறது?
காலம் எப்போதும் மௌனமாக கடந்து போகாது.
உங்களை போன்ற பாசிச காதலர்களை அம்பலப்படுத்தும்  
எல்லாவற்றிலும் அரசியல் இலாபம் கருதியே சிந்திப்பீர்களா?
தப்பி தவறி கூட ஒரு மனிதராக சிந்திக்கவே மாட்டீர்களா?
போதும் போதும் நிறுத்துங்கள்    இந்த பாசிச வெறியாட்ட பஜனை கொடூரமானது
அந்த பாசிஸ்டுகளால் உயிரை பறிகொத்தவர்களின்  சாபம் உங்களை நிம்மதியாக இருக்க விடாது.  
அறம் என்பது ஒரு வெற்று சொல் அல்ல ..  ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக