புதன், 8 பிப்ரவரி, 2023

என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் நான் உங்கள் வீட்டில் வீட்டுவேலை பார்க்கின்றேன் – இடிபாடுகளிற்குள் சிக்கி மன்றாடிய சிறுமி

BBC :  சிரியாவின் வடபகுதியில் பூகம்பத்தினால் தரைமட்டமான வீட்டின் கொன்கீறீட் இடிபாடுகளிற்குள் சிக்குப்பட்டிருந்த இருசகோதரங்கள் 36 மணித்தியாலத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளனர்.
சிரியாவின் ஹராம் கிராமத்தை தாக்கிய பூகம்பத்தினால் இடிபாடுகளிற்குள் சிக்குப்பட்டிருந்த இவர்கள்
மீட்கப்படுவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் நான் உங்களிற்கு என்னவேண்டும் என்றாலும் செய்வேன் வீட்டில் வேலைபார்ப்பதற்கும் நான் தயார் என சிறுமி தன்னை காப்பாற்ற முயலும் நபரிடம் தெரிவிக்கின்றார்.
இல்லை இல்லை அப்படி சொல்லவேண்டாம் என மீட்புபணியாளர் தெரிவிக்கின்றார்


அந்த சிறுமியின் பெயர் மரியம்-எஞ்சியிருக்கின்ற கட்டிலில் தனது இளைய சகோதரனுடன் காணப்படும் மரியம் சகோதரனின் தலையை மெதுவாக வருடுகின்றார்.
தனது கையால் சகோதரனின் முகத்தை மூடி சகோதரனின் முகத்தில் இடிபாடுகளின் தூசி படுவதை அவர் தடுக்கின்றார்.
இளைய மகனின் பெயர் இலாவ் என்கின்றார் தந்தை – அதன் அர்த்தம் பாதுகாவலன்.

தாங்கள்( மனைவி – மூன்று பிள்ளைகள்) உறங்கிக்கொண்டிருந்தவேளை அதிகாலையில் பூகம்பம் தாக்கியது என தெரிவிக்கின்றார் தந்தை.
நாங்கள் நிலம் அதிர்வதை உணர்ந்தோம்.கட்டிடத்தி;ன் பகுதிகள் எங்கள் தலைமீது விழத்தொடங்கின நாங்கள் இரண்டு நாட்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டிருந்தோம் என தந்தை தெரிவித்தார்.
எவரு அனுபவிக்க கூடாத வேதனையை நாங்கள் அனுபவித்தோம் என்கின்றார் அவர்.

இடிபாடுகளிற்குள் சிக்குண்டிருந்த படி நாங்கள் உரத்த குரலில் குரான் வாசித்தோம்- எங்களை யாராவது கண்டுபிடிப்பார்கள் என நினைத்தோம் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

எங்கள் குரல்களை மக்கள் கேட்டார்கள் எங்களை காப்பாற்றினார்கள் கடவுளுக்கு நன்றி நாங்கள் அனைவரும் உயிருடன் இருக்கின்றோம் காப்பாற்றியவர்களிற்கு நன்றி எனவும் அவர் தெரிவித்தார்.
மரியத்தையும் இலாபையும் போர்வையில் சுற்றி வெளியே பாதுகாப்பாக மீட்பு பணியாளர்கள் கொண்டுவருவதையும் மக்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்பதையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன.

அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் குளிரின் மத்தியில் மக்களை மீட்பது குறித்த நம்பிக்கைகள் நிமிடத்திற்குநிமிடம் குறைவடைகின்றன.
முற்றிலும் தரைமட்டமாகியுள்ள கட்டிடங்களில் இருந்து உயிர்தப்பியவர்கள் கூட கடுங்குளிரை சமாளிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
அல்சயிட்டின் வீடு இட்லிப்பில் உள்ளது – கிளர்ச்சியாளர்களின் பகுதியில்- இங்கு1200 பேர் உயிரிழந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக