tamil.oneindia.com - Mathivanan Maran ;சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மூத்த வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இன்று திடீரென சந்தித்தார்.
புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் அறிவித்தது சரி என வாதிட்டு வரும் கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.
உயிருடன் பிரபாகரன்-மறுப்பவர்கள் இந்த 8 கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா?
கே.எஸ். ராதாகிருஷ்ணன் பொளேர் உயிருடன் பிரபாகரன்-மறுப்பவர்கள் இந்த 8 கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா? கே.எஸ். ராதாகிருஷ்ணன் பொளேர்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்ட போது திமுகவின் செய்தித் தொடர்பு செயலராக இருந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சமூக வலைதளப் பக்கங்களில் சில கருத்துகளைப் பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து திமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் பல்வேறு விமர்சனங்களையும் சமூக பிரச்சனைகள் சார்ந்த நிலைப்பாட்டையும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வெளிப்படுத்தி வந்தார்.
அண்மையில் புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அறிவிக்கிறேன் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்திருந்தார்.
இது உண்மைதான் என கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆணித்தரமான வாதங்களுடன் எழுதினார்.
தொடக்க காலங்களில் பிரபாகரனுடன் ஒரே அறையில் தங்கி இருந்த, மிக நெருக்கமானவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் என்பதால் அவரது இந்த வாதங்கள் ஈழத் தமிழர்களிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பழ.நெடுமாறனை நேரில் சந்தித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
இந்நிலையில் இன்று திடீரென சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கே.எஸ்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பு தொடர்பாக கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தமது சமூக வலைதளப் பக்கங்களில், இன்று (24-2-2023)காலை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து பல விடயங்களைப் பேசக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. தமிழ் இலக்கியம், ஈழத்தமிழர் பிரச்னை, இந்து மகாசமுத்திரமும் இந்திய பாதுகாப்பும், இன்றைய அரசியல் போன்றவை குறித்து ஏறத்தாழ 1 மணி நேரத்துக்கும் மேலாக அவருடன் விவாதிக்க வாய்ப்புக் கிடைத்தது.
ஆளுநர் நன்கு உபசரித்தார். பல விடயங்களைக் குறித்தான தரவுகளைப் பகிர்ந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார். பிரபாகரன் உயிருடன் இருப்பது தொடர்பாகவும் கே.எஸ். ராதாகிருஷ்ணன் இந்த சந்திப்பில் விவரித்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக