வியாழன், 2 பிப்ரவரி, 2023

அமைச்சர் சேகர் பாபு : எங்கள் கை பூ பறிக்குமா” சீமானுக்கு அமைச்சர் பதிலடி!

 minnambalam.com  - Kavi :  “எங்கள் கை பூ பறிக்குமா”: சீமானுக்கு அமைச்சர் பதிலடி!
கடலுக்குள் பேனா வைத்தால் உடைப்பேன் என்று சீமான் கூறியதற்கு அமைச்சர் சேகர்பாபு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்குக் கடலுக்குள் சிலை அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மெரினாவில் கடலுக்குள் சிலை அமைப்பது தொடர்பாகச் சென்னை கலைவாணர் அரங்கில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கடலுக்குள் பேனா வைத்தால், அதை நான் உடைப்பேன். பள்ளிகளுக்குச் செலவு செய்ய காசில்லை என்கிறீர்கள், இதற்கு மட்டும் எங்கிருந்து காசு வருகிறது என்று ஆவேசமாக கூறியிருந்தார்.


சீமானின் பேச்சுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு கங்காதரேசுவர் திருக்கோயிலில் சீரமைப்பு பணிகளைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா? .எல்லாருக்கும் கை இருக்கிறது. இந்த பதிலே அவருக்கு போதும்” என்று கூறினார்.
பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக