tamil.goodreturns.in - Pugazharasi S : அதானி குழுமத்தினை சேர்ந்த 10 பங்குகள் 8.76 லட்சம் கோடி ரூபாய் (107 பில்லியன் டாலர்) சந்தை மூலதனம், கடந்த ஆறு அமர்வுகளில் சரிவினைக் கண்டுள்ளது.
இது 81.80 ரூபாய் டாலர் மாற்று விகிதத்தில் எத்தியோப்பியா அல்லது கென்யாவின் 110 - 111 பில்லியன் டாலர் வருடாந்திர ஜிடிபி அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதானி குழும பங்குகளில் ஏற்பட்ட தொடர் சரிவில் அதானி டோட்டல் கேஸ் 29 பில்லியன் டாலர்கள் இழப்பினை கண்டுள்ளது. இதேபோல மற்ற பங்குகளும் பலத்த சரிவினைக் கண்டுள்ளன.
ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீடு
ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின் படி, அதானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு, ஜனவரி 24ம் தேதி வரையில் 119 பில்லியன் டாலராக இருந்தது. இந்த நாளில் தான் ஹிண்டர்ன்பர்க் அறிக்கையினை வெளியிட்டது. இது கடந்த ஆண்டு செப்டம்பரில் அதிகபட்சமாக 150 பில்லியன் டாலராக இருந்தது.
இன்று அதானியின் சொத்து மதிப்பு
இதே போர்ப்ஸ் அறிக்கையின் படி, இன்று அதானியின் சொத்து மதிப்பு 64.6 பில்லியன் டாலராக இருந்தது. அதானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 85 பில்லியன் டாலர் வீழ்ச்சியினை கண்டுள்ளது. இது பல்கேரியாவின் ஜிடிபி-க்கும் சமமாகும்.
எந்த நிறுவனம் எவ்வளவு சரிவு?
அதானி கிரீன் எனர்ஜியின் சொத்து மதிப்பு 16.95 பில்லியன் டாலர் சரிவினையும், அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 16.36 பில்லியன் டாலர் மதிப்பினையும் சரிவினைக் கண்டுள்ளன. இதே அதானி போர்ட்ஸ் & செஸ், அம்புஜா சிமெண்ட்ஸ் 3.55 பில்லியன் டாலர், அதானி வில்மர் நிறுவனத்தின் 2.4 பில்லியன் டாலர் மதிப்பும், ஏசிசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.13 பில்லியன் டாலரும் சரிவினைக் கண்டுள்ளது.
என்ன காரணம்?
அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் அறிக்கைக்கு பிறகு பலத்த சரிவினைக் கண்டுள்ளன. குறிப்பாக அதானி குழுமத்தின் மீதான குற்றசாட்டுகளுக்கு பிறகு, அடுத்தடுத்த பிரச்சனைகளை விஸ்வரூபம் எடுத்து வருகின்றது. இதற்கிடையில் தான் அதானி குழும பங்குகள் கடும் சரிவினைக் கண்டு வருகின்றது.
ரிசர்வ் வங்கியின் கோரிக்கை
கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. அதானி குழுமத்தின் மொத்த கடன் எவ்வளவு என ரிசர்வ் வங்கியும் அறிக்கையினை கேட்டுள்ளது. இதன் கடன் விகிதம் கவலையளிக்கும் விஷயமாக இருக்கலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது.
கடன் எவ்வளவு?
இது குறித்து வென்ச்சுரா செக்யூரிட்டிஸின் ஆராய்ச்சி தலைவர் வினித் பொலிஞ்ச்கர் கூறுகையில், அதானி குழுமத்தின் நிகர கடன் 1.60 லட்சம் கோடி ரூபாயாகவும், இதே எபிட்டா விகிதம் 57,000 கோடி ரூபாயாக உள்ளது என தெரிவித்துள்ளது.
அதானி கிரீன் நிறுவனத்தை தவிர பெரும்பாலான நிறுவனங்கள், அதானி குழும நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டவில்லை.
அதானியின் முடிவென்ன?
அதானி எண்டர்பிரைஸ் நிறுவனம் தனது கடன் சுமையை குறைப்பதற்காக கூடுதலாக பங்குகளை சந்தையில் விற்பனை செய்து நிதி திரட்டவே இந்த FPO-வை அறிவித்து இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையை தொடர்ந்து அதன் பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் புதிய பங்குகளை வாங்க விண்ணப்பித்து இருந்த முதலீட்டாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கலாம். இதன் காரணமாகவே அதானி நிறுவனம் தனது ஃஎப்.பி.ஓ-வை திரும்பப்பெற்றுள்ளது என தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
Adani group's 6th day fall equals GDP of ethiopia, kenya
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக