சனி, 4 பிப்ரவரி, 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா நாட்டு மக்களுக்கான சுதந்திர நாள் உரையின் முழு வடிவம்! (காணொளி)

 hirunews.lk  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா  நாட்டு மக்களுக்கான சுதந்திர நாள்  உரையின் முழு வடிவம்! (காணொளி)
இலங்கை முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இனம், மதம் பேதமின்றி ஒன்றிணைவதே சிறந்த வழி என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இலங்கை சுதந்திரமடைவதற்கு காரணமாக இருந்தவர்களுள் ஒருவரான டி.எஸ்.சேனாநாயக்க இன ஐக்கியத்தையே முக்கியமானதாக கருதினார்.

எனினும், டி.எஸ்.சேனாநாயக்கவை தொடர்ந்து வந்த அரசியல் தலைவர்களும், அவர்களின் அரசியல் அனுகுமுறையும் இனவாதத்தை தூண்டும் வகையிலே அமைந்தது.
இலங்கை தமிழ்,சிங்களம்,முஸ்லிம்,பறங்கியர் என அனைத்து இனமும் வாழும் நாடாகும்.
இந்த நாட்டிலே இன ஒற்று மை என்பது மிக முக்கியமானதொன்றாகும்.
நாம் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இதன் முதல்படியாக காணிகளை விடுவித்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது.

விரைவில் அதனையும், பெற்றுக்கொள்ள முடியும் என தாம் நம்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக