வெள்ளி, 27 ஜனவரி, 2023

மோடி - பிபிசி ஆவணப்படத்தை செல்போனில் பார்த்த சென்னை மாநகராட்சி சிபிஎம் கவுன்சிலர் கைது

hindutamil.in  :  மோடி - பிபிசி ஆவணப்படத்தை செல்போனில் பார்த்த சென்னை மாநகராட்சி சிபிஎம் கவுன்சிலர் கைது
கைது செய்யப்பட்ட கவுன்சிலர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்
சென்னை: பிபிசி வெளியிட்ட குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை செல்போனில் பார்த்த சிபிஎம் கவுன்சிலர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரம் குறித்து ‘இந்தியா: மோடி கேள்விகள்’ என்ற ஓர் ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசின் உத்தரவின்படி, யூடியூப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து பிபிசி பதிவு நீக்கப்பட்டது.
ஆனால் நாடு முழுவதும் இந்த ஆவணப்படத்தின் திரையிடல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தெருக்கள் தோறும் ஆவணப்படத்தை கொண்டு சேர்க்க போவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறிவித்து இருந்தது.
இதனையொட்டி சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் சித்தார்த்தன் தலைமையில் அண்ணாநகர் தா.பி.சத்திரம் அம்பேத்கர் சிலை அருகே இளைஞர்கள் ஒன்று கூடி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என்று முழக்கமிட்டனர்.

இதனை தொடர்ந்து சாலையோரம் அமர்ந்து செல்போனில் ஆவணப்படத்தை பார்த்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி 98வது வார்டு கவுன்சிலர் ஆ.பிரியதர்ஷினி உள்ளிட்ட கலந்து கொண்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதன் பிறகு அவர்களை விடுதலை செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக