புதன், 25 ஜனவரி, 2023

சொந்த தேசத்து மக்களையே லட்சக் கணக்கில் கொன்று குவித்த கம்யூனிஸ ஜோசெப் ஸ்டாலின்.

 Rishvin Ismath :  மிகைல் கொர்பச்சேவ் என்ற ஒரு மாமனிதர் தோன்றி சுதந்திரம் பெற்றுக் கொடுப்பதற்கு முன்னர் சோவியத் ஒன்றிய மக்கள் கம்யூனிஸ அடக்கு முறையின் கீழ் சொல்லனாத் துயரங்களை அனுபவித்தனர்.
சொந்த தேசத்து மக்களையே லட்சக் கணக்கில் கொன்று குவித்தான் கம்யூனிஸ கொடுங்கோலன் ஜோசெப் ஸ்டாலின்.
மாமனிதர் மிகைல் கொர்பச்சேவின் புத்திசாலித்தனமான நகர்வுகளால் சோவியத் ரஷ்யச் சிறை தகர்க்கப்பட்டு மக்கள் சுதந்திரம் பெற்று 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது,
அந்த சோவியத் சிறையில் வாழ்ந்த மக்களோ, தேசங்களோ மீண்டும் கம்யூனிஸ சோவியத் வேண்டும் என்று கேட்டதில்லை.
ஆனால் கம்யூனிஸத்தின் கீழ் ஒரு போதும் வாழாத தோழர்கள் சில புத்தகங்களை மட்டும் படித்துவிட்டு கம்யூனிஸ ஆட்சி என்றால் சொர்க்கம் என்பது போன்ற கற்பனையில் மிதக்கின்றனர்.


கம்யூனிஸ ஆட்சி என்பது உண்மையில் சிறந்த ஒன்றாக இருந்திருந்தால் சோவியத் ரஷ்யா உட்பட கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கம்யூனிஸ ஆட்சிகளை அந்த மக்களே தூக்கிக் குப்பையில் எறிந்து இருப்பார்களா? இப்பொழுது அவர்கள் அனுபவிக்கும் சுதந்திர வாழ்க்கையை விட கம்யூனிஸத்தின் கீழ் வாழ்ந்த காலம் உண்மையில் சிறந்த காலமாக இருந்திருந்தால் அந்த மக்களே வீதியில் இறங்கிப் போராடி மறுபடியும் கம்யூனிஸ ஆட்சிகளைக் கொண்டு வந்திருக்க வேண்டுமே?
கம்யூனிஸ ஆட்சியின் கீழ் பிறந்து வளர்ந்த மக்களே அந்தக் கொடுமை இனி ஒருபோதும் வேண்டாம் என்று சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக் கொண்டு இருக்க,
கொம்யூனிஸ ஆட்சியின் கொடூரத்தை ஒரு நாள் கூட அனுபவிக்காதவர்கள் ஜனநாயக உலகில் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டு 'கம்யூனிஸ ஆட்சி வேண்டும்' என்று கேட்பது கவலையான விடயம்.
சில புத்தகங்களை வாசித்து விட்டு கம்யூனிஸ ஆட்சிதான் சிறந்தது என்று நம்புவது, சில மதப் புத்தகங்களை வாசித்து விட்டு 'இறைவனுக்காக என்று குண்டு வைத்துக் கொண்டு செத்தால் சொர்க்கமும், கன்னிகளும் கிடைக்கும்' என்று நம்புவதைப் போன்ற ஒன்றே.

ஆச்சரியமான ஒரு அவதானம் : சில புத்தகங்களை வாசித்து விட்டு 'கம்யூனிஸ ஆட்சிதான் சிறந்தது' என்று நம்புகின்றவர்கள், சில புத்தகங்களை வாசித்து விட்டு 'குண்டு வைத்துக் கொண்டு செத்தால் சொர்க்கமும், கன்னிகளும் கிடைக்கும்' என்று நம்புகின்றவர்களோடு கூட்டணி வைப்பதிலும், அவர்களின் மதத்தைப் பாதுகாப்பதிலும் ஈடுபடுவதைக் காண முடிகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக