vinavu.com : மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இந்திய உழைக்கும் மக்கள் மீது தொடுத்துவரும் பல்வேறு தாக்குதலில் ஒன்று, இன-மொழி அடிப்படையிலான தாக்குதலாகும். இவற்றில் முதன்மையானது இந்தி மொழித்திணிப்பாகும்.
இந்தித் திணிப்பின் அடிப்படை, அகண்ட பாரதம், பார்ப்பன வர்ணாசிரம ஆதிக்கம், சமஸ்கிருத மேலாதிக்கம் என்கிற அடிப்படையிலான ‘இந்து-இந்தி-இந்தியா’ என்ற கோட்பாடாகும்.
இந்த இந்தித் திணிப்பு என்பது தமிழகத்தின் மீது திணிக்கப்படுவதாகவும் அதனை எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டும் என்றும் நம்மவர்கள் பேசி வருகின்றனர்; இது முழு உண்மையல்ல. இந்தித் திணிப்பு என்பது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்படுகிறது. மேற்கு வங்கம், கேரளா, தமிழகம், பஞ்சாப், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் இந்தித் திணிப்பை எதிர்த்தாலும், அதனை வீரத்துடன் எதிர்த்துப் போரிட்ட வரலாறு தமிழகத்திற்கு மட்டுமே உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக