வியாழன், 19 ஜனவரி, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டி

 மாலைமலர் : முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பேச்சுவார்த்தை நடத்தினார். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மரணம் அடைந்தார்.
இதையடுத்து இந்த தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
வேட்பு மனுதாக்கல் வருகிற 31-ந்தேதி தொடங்க உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.


ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்கவேண்டும் என அக்கட்சியினர் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்நிலையில், முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில், ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால், மீண்டும் காங்கிரசுக்கே கொடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் காங்கிரசார் உற்சாகம் அடைந்துள்ளனர். விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக