வெள்ளி, 13 ஜனவரி, 2023

தமிழ்நாடு : தம்பி உன் இருப்பிற்கே சவால் விடுகிறான் அவன்!

 தமிழ்நாடு  :  தம்பி உன் இருப்பிற்கே சவால் விடுகிறான் அவன்!
உனக்கு இன்னும் உணர்வு துடிக்கவில்லை!
சினிமாக்காரர்களுக்கு விளக்கு பிடிக்கவே உனக்கு நேரம் போதாது!
தமிழ்நாடு என்ற உன் தேசத்தின் பெயரை அவன் சிதைத்தால் கூட உனக்கு கவலை இல்லை!
சினிமாவினாலும் சூதினாலும் உன் மக்கள் அழிந்தால் என்ன
உன் வேடிக்கைகள்தான்  உனக்கு முக்கியம்.!
ஆரிய முதலைகள் உன்னை விழுங்கி கொண்டிருப்பது கூட அறியாத வெற்று பொருளாகி விட்டாயா நீ?
நீ விழுங்கப்பட்டு கொண்டிருப்பது கூட உனக்கு தெரியவில்லையே?
இதுதான் தம்பி ஆரிய மாயை என்று கூறுவது!
உன் இருப்பு கேள்விக்குறியாகி கொண்டிருக்கிறது!
மயக்கம் தெளிந்து கண்ணை விழித்து பார்!
உன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்!
திராவிடன் சிந்திக்க தெரிந்தவன்!   
எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல கருதுபவன்!
மனித மாண்புகள் உடையவன்!
திராவிட கோட்பாட்டை சிதைப்பதற்குதான் அவன் வருகிறான்
உன்  மாண்புகள் அவன் கண்ணை உறுத்துகிறது!
இன்று நீ தூங்கினால்  நாளை உன்னால் எழுந்திருக்கவே முடியாது போகும்!.
அதைத்தான் தம்பி வரலாறு சொல்கிறது!
ராதா மனோகர்

1 கருத்து:

  1. சினிமாவினாலும் சூதினாலும் மற்றும் குடிப்பழக்கத்தினாலும் தமிழன் அழிகிறான்

    பதிலளிநீக்கு