செவ்வாய், 10 ஜனவரி, 2023

அஜீத் ரசிகர்களின் டிக்கெட் திருட்டு! வேலூர் ..மொத்த டிக்கெட்டுகளும் கோவிந்தா

 நக்கீரன் : தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாகத் திகழும் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் 9 வருடங்கள் கழித்து ஒரே தேதியில் வெளியாகவுள்ளன.
இதனால் அவர்களது ரசிகர்களைத் தாண்டி ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகின் பார்வையும் தற்போது 'வாரிசு' மற்றும் 'துணிவு' பட ரிலீஸை நோக்கி உள்ளது.
இருவரின் ரசிகர்களும் அவர்களது விருப்ப நடிகர்களின் படங்கள் தனித்தனியே வெளியானாலே பேனர், பட்டாசு என்று திருவிழாவாகவே மாற்றிவிடுவார்கள்.
 இப்போது இருவரின் படங்களும் பொங்கலை முன்னிட்டு ஒன்றாக வருவதால் திரையரங்கம் மற்றும் முக்கியமான பகுதிகளில் பார்க்கும் இடமெல்லாம் பேனர், போஸ்டர், பட்டாசு என்று போட்டிப் போட்டு பட்டையைக் கிளப்பி வருகின்றனர்.


இந்த நிலையில், வேலூர் அஜித் ரசிகர்கள் நாளை (11.01.2023) வெளியாகவுள்ள துணிவு படத்தை பார்ப்பதற்காக டிக்கெட்டுகளை நேற்று (09.01.2022) வாங்கி அஜித் நற்பணி மன்றத்தில் வைத்துள்ளனர். அலுவலகத்தை பூட்டிவிட்டுச் சென்றுவிட்ட ரசிகர்கள் மறுநாளான இன்று (10.01.2023) வந்து பார்க்கையில் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டரை திறந்து யாரோ சில மர்ம நபர்களால் மொத்த டிக்கெட்டுகளும் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அஜித் ரசிகர்கள் அந்த மர்ம நபர்களை கண்டுபிடித்துத் தருமாறு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக