சனி, 28 ஜனவரி, 2023

யாழ் மாவட்டத்தில் 4,111 பேர் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர்

 ஹிருநியூஸ் : யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நான்காயிரத்து 111 பேர் போட்டியிடவுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண தேர்தல் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 15 சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன.
இந்த முறை தேர்தலில் வாக்களிப்பதற்கென யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 லட்சத்து 86 ஆயிரத்து 423 வாக்காளர்கள் தகுதிப் பெற்றுள்ளனர்.
இதற்காக 514 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக போட்டியிடவுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக