சனி, 31 டிசம்பர், 2022

 ராமேஸ்வரம் தலைமன்னார் புகையிரத பாதை சாத்தியமா? 1893 இல் ஆங்கிலேயர்கள் முயன்ற திட்டம் .. இந்திய லங்கா றெயில்




 

1893 ஆம் ஆண்டிலேயே இந்தியாவையும் இலங்கையையும் ரயில் பாதை மூலம் இணைக்கும் ஒரு முயற்சியை ஆங்கிலேயர்கள் ஆய்வு செய்துள்ளனர் . இதன் விபரங்களை அன்றைய ஆங்கிலேய அரசின் உரிய ஆவணங்களை படித்தால்தான் முழுமையாக தெரியவரும்
மன்மோகன் சிங் அவர்களின் காலத்தில் அன்றைய இலங்கை பிரதமராக இருந்த திரு ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் இது கவனம் எடுத்திருந்தார்.
இந்திய அரசிடம் இது பற்றி பேசியும் இருந்தார் . அந்த பேச்சுவார்த்தை ஆய்வு நிலையிலேயே இருந்தது. திரு ரணில் விக்கிரமசிங்கவின் இந்த கோரிக்கை இந்திய ஆட்சியாளரிடம் என்ன விளைவை அப்போது ஏற்படுத்தி இருந்தது என்பது தெரியவில்லை . ஆனாலும் இது பற்றி ஆய்வு செய்வதாக கூறியிருந்தனர் .
ரணிலின் ராமேஸ்வரம் தலைமன்னார் ரயில் பாதை என்பது நடக்கவே முடியாத ஒரு திடடம் என்று கூற முடியாது. இது பற்றி 1893 யிலேயே ஆங்கிலேயர்கள் சிந்தித்து இருக்கிறார்கள் என்பது ஒரு முக்கியமான செய்தியாகும் . இது பற்றிய ஒரு முக்கிய குறிப்பு யாழ்ப்பாணத்தில் இருந்து அப்போது வெளியான கத்தோலிக்க பாதுகாவலன் அல்லது Jaffna Catholic Guardian என்ற இதழில் வெளியாகி உள்ளது  

 கத்தோலிக்க பாதுகாவலன்The Jaffna Catholic Guardian october 21 st 1893. Jaffna
இந்திய லங்கா றெயில் ..
இந்திய அரசாட்சியார் தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்திற்கு இடையே உள்ள பாறைகளை சோதித்து நியாயமான செலவுடன் ரெயில் போடலாமோ என்பதை  ஆராய்வார்கள்
கத்தோலிக்க பாதுகாவலன் பத்திரிகையில் இந்த செய்தி கொஞ்சம் விரிவாக வெளிவந்துள்ளது. அந்த காலத்து தமிழ் எழுத்து நடையும் சொற்களும் கொஞ்சம் ஆழமாக நோக்கினால்தான் உள்ளடக்கம் புரியும் . மதுரையில் இருந்து கொழும்பு வரையான ரெயில் பாதையும் அதன் தேவையும் பற்றி சுவாரசியமான சில செய்திகள் இதில் உள்ளன
இலங்கை தீவுக்கு பாலம் அமைப்பது என்பது   1893 ஆம் ஆண்டிலே ஒரு பத்திரிகை செய்தியாக வந்திருக்கிறது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக