ஞாயிறு, 4 டிசம்பர், 2022

தமிழ்நாட்டில் நடப்பது அரசியல் இல்லை, மறைமுக போர்.!

May be an image of 11 people and beard

Kandasamy Mariyappan  :  உண்மையில் தமிழ்நாட்டில் நடப்பது அரசியல் இல்லை, மறைமுக போர்.!
பொருளாதார, சாதி, மத ஆதிக்க பலம் வாய்ந்த, ஒன்றிய ஆட்சி அதிகார பலம் வாய்ந்த, ஏவுகனை பீரங்கி வசதிகளை கொண்ட ராணுவ பலம் வாய்ந்த, பண பலம் உள்ள RSS/BJP/ADMK என்ற அணிக்கும்...
சித்தாந்த புரிதல் குறைவாக உள்ள, வாழ்வாதார சிந்தனை குறைவாக உள்ள மக்களுக்காக சாதிய, மத, பொருளாதார ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராடும் சித்தாந்த பிடிப்போடு, குறைவான பண பலமுள்ள திமுக/கம்யூனிஸ்ட்/விசிக அணிக்கும் நடக்கும் மிகப்பெரிய போர்.!!!


திமுக...
RSS/Congress, RSS/BJP, RSS/ADMK போன்று இல்லாமல் முதலாளித்துவ, சாதி மத ஆதிக்க சக்திகளுக்கு எதிராக வாக்கு அரசியலில் உள்ள ஒரு சித்தாந்த இயக்கம்.!
அவ்வளவு எளிதில் திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமரவிட மாட்டார்கள்.!
அப்படியே ஆட்சிக்கு வந்தாலும் நிம்மதியாக ஆட்சி செய்ய விட மாட்டார்கள்.!
ஆதிக்க சக்திகளோடு ஓரளவு சமரசம் ஏற்படுத்தித் கொண்டதால்தான் திமுக அவ்வப்போது ஆட்சிக்கு வர முடிகிறது.,
சமரசம் செய்ய முடியாத கம்யூனிஸ்ட் ஆட்சியை நோக்கி முன்னேற முடியாமல் (ஒன்றியத்தில்) தவிக்கிறது.!
இதுதான் உண்மை.!
இதனை உணராத திரு. ஈ.வி.க.சம்பத், திரு. ராமச்சந்திரன், திரு. வைகோ போன்றவர்கள் தொடர்ந்து கட்சியை பலவீனப்படுத்தினர்.!
பலவீனமடைந்த கட்சிக்கு திரு. செந்தில் பாலாஜி, திரு. சேகர் பாபு போன்ற அந்ததந்த பகுதி பலமானவர்கள் வரும்பொழுது அதனை பயன்படுத்தி திமுகவை வலுவாக்க வேண்டிய பொறுப்பு தலைமைக்கு உள்ளது.!
அதிமுக களத்தில் பணி புரிய வேண்டிய முக்கியமே இல்லை.!
அவர்களுக்காக காங்கிரஸ், வலதுசாரி, இடதுசாரி, அம்பேத்கரிய, இயற்கை சூழல் காப்பாளர்கள், NGOக்கள் ஊடகங்கள்,சினிமா இயக்குனர்கள், நடிகர்கள் என்று ஏராளமானவர்கள் உள்ளனர்.!
ஆனால் திமுகவிற்கு திமுக மட்டுமே உழைக்க வேண்டும்.!
ஜெயலலிதாவின் லட்சம் கோடிகளில் உள்ள சொத்துகளை எந்த ஊடகங்களும் NGOக்களும் கேள்வி எழுப்பாது.!
2016ல் 7 கண்டெய்னரில் சென்ற பணம் எங்கே, என்னவானது என்ற கேள்விகளை கேட்காது.!
85 கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றி தேர்தலை நிறுத்தி வைத்த தேர்தல் கமிஷன் அதிமுக மீது நடவடிக்கை எடுக்காது.!
ஆனால் திமுகவின் சிறு தவறுகளை, கலைஞரின் சிறு தவறுகளை ஊதி பெரிதாக்கும் இந்த ஊடக பேய்கள், NGOக்கள்.!
1962ல் அண்ணாவை தோற்கடிக்க பணம் கொடுத்த காமராஜர் காங்கிரசை கேள்வி கேட்காது.,
1984ல் பணம் மற்றும் எவர்சில்வர் குடங்களை கொடுத்து வாக்கு சேகரித்த ராமச்சந்திரன் அதிமுகவை கேள்வி கேட்காது.,
ஆனால் திருமங்கலம் ஃபார்முலா என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து திமுக மீது சுத்திக் கொண்டே இருப்பார்கள்.!
இதுதான் வலதுசாரிகளின் சதி.!
அதிமுகவில் திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி என்ற பஃபூன்களையும் வெற்றிபெற செய்து அமைச்சராக்கி அழகு பார்ப்பார்கள்.!
திமுகவை தோற்கடிக்க ஷஷிகலா என்ற ஷாக்கடையையும் பயன்படுத்துவோம் என்பார்கள்.!
ஆனால் திரு. தியாகராஜன் போன்றவர்களை நிதியமைச்சராக திமுக நியமித்தால் கூட அசிங்க படுத்தி அவமானப்படுத்துவார்கள்.!
எனவே தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினால் திமுகவோடு பயணம் செய்யுங்கள்.,
பணம் பதவி வேண்டும் என்றால் RSS/BJP/ADMK பக்கம் சென்று விடுங்கள்.!
திமுகவில் இருந்து கொண்டு கட்சிக்கிரனுக்கு பதவி இல்லை, பணம் கிடைக்கவில்லை, மரியாதை இல்லை என்று புலம்பாதீர்கள்.!
புரிதலுக்கு நன்றி.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக