மாலை மலர் : இஸ்லாமாபாத் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரம் உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர்.
10 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது ஊழியர்கள் உள்பட அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் இஸ்லாமாபாத்தின் மேரியட் ஹோட்டலில் அமெரிக்கர்களை தாக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளதாகவும்,
தீவிரவாத தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளதால் அங்கு அமெரிக்கர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் வழிபாட்டுத் தலங்களில் அமெரிக்க தூதரக ஊழியர்கள் விழிப்புடன் செயல்படவும், அதிக மக்கள் கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத் நகரம் சிவப்பு எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளதால்,
விடுமுறை காலம் முழுவதும் அங்கு அத்தியாவசியமற்ற மற்றும் அதிகாரப்பூர்வமற்ற பயணங்களை அமெரிக்கர்கள் தவிர்க்குமாறும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்லாமாபாத்தின் அமைதியை சீர்குலைக்கும் அச்சுறுத்தல்களைத் தவிர்க்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நகர துணை கமிஷனர் இர்பான் நவாஸ் மேமன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக