செவ்வாய், 27 டிசம்பர், 2022

அமெரிக்கா -பனிப்புயலுக்கு 60 பேர் பலி - 15 ஆயிரம் விமானங்கள் ரத்து

 தினத்தந்தி  :   அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது.
வாஷிங்டன், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற பல்வேறு மேற்கத்திய நாடுகளில் ஆண்டு இறுதியில் குளிர்காலம் உச்சத்தில் இருக்கும்.
அந்த வகையில், பல்வேறு நாடுகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அளவு உச்சத்தை ஏட்டியுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு பண்டிகைகளுக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடும் பனிப்பொழிவு மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது. பனிப்பொழிவுடன் சேர்ந்து பனிப்புயலும் வீசி வருகிறது. பனிப்புயலால் நியூயார்க் மாகாணம் பப்பலோ நகரம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.


நியூயார்க்கின் சில பகுதிகளில் நேற்று ஒரேநாளில் 23 செ.மீட்டர் பனி பொழிந்துள்ளது. கடுமையான பனிப்புயலும் வீசி வருவதால் அமெரிக்காவில் மொத்தம் 15 ஆயிரத்திற்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை, பனிப்புயல் மற்றும் பனியால் ஏற்பட்ட விபத்துகள் தொடர்பாக அமெரிக்காவில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். பனிப்புயல் அதிகரித்து பனிப்பொழிவு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் தேவையான நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக