செவ்வாய், 20 டிசம்பர், 2022

கர்நாடகாவில் 4ம் வகுப்பு மாணவனை பால்கனியில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற ஆசிரியர்

Angry Karnataka Teacher Kills Class 4 Student, Beats Up Mother: Cops

 மாலைமலர் : பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹாக்லி என்ற கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்த பாரத் என்ற மாணவனை, அவனது ஆசிரியர் முத்தப்பா இன்று மண்வெட்டியால் கடுமையாக தாக்கி உள்ளார்.
அப்போதும் ஆத்திரம் தணியாத அவர், மாணவனை முதல் மாடியின் பால்கனியில் இருந்து கீழே தள்ளி உள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த மாணவன் பாரத், பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
உயிரிழந்த மாணவனின் தாயார் அதே பள்ளியில் ஆசியையாக பணியாற்றுகிறார்.


அவரையும் ஆசிரியர் முத்தப்பா கடுமையாக தாக்கி உள்ளார்.
இதில் காயமடைந்த ஆசிரியை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தலைமறைவான ஆசிரியர் முத்தப்பாவை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த கொலைக்கான காரணம் குறித்து எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை. அவர்களின் குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக