வெள்ளி, 9 டிசம்பர், 2022

சென்னை விமான நிலையத்தில் 25 விமான சேவை நிறுத்தம் .. மாண்டஸ் புயல் எதிரொலி-

 மாலை மலர் :   மேற்கு வடமேற்கு திசையில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் நிலவிய மாண்டஸ் தீவிர புயல், வலுவிழந்து புயலாக மாறியுள்ளது.
இந்நிலையில், மேற்கு வடமேற்கு திசையில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், சென்னை விமானநிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மைசூர், கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூரு, திருச்சி, மதுரை, ஹைதராபாத், ஹூப்ளி, கண்ணூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக