புதன், 7 டிசம்பர், 2022

ஒருவேளை 1993ல் சன் டிவி ஆரம்பிக்கப்படாமல் இருந்திருந்தால்........... புதிய தலைமுறை, விஜய் டிவி, தந்தி, News 7, News 18, Polimer எல்லாம்

Image result for sun news tv live

Kandasamy Mariyappan  :  ஊடகத்துறையில் நடப்பது என்ன?
மீண்டும் ஊடகங்கள் RSS, சங்க பரிவார, ஃபாசிச கும்பலின் கைகளுக்கு சென்றதாகவே பார்க்கிறேன்.!
2007ல் செய்த அருவருக்கத்தக்க செயலை தவிர்த்து சன் குழுமம் மீது எனக்கு எப்போதுமே மரியாதை உண்டு.!
சிந்தித்து பாருங்கள்., ஒருவேளை 1993ல் சன் டிவி ஆரம்பிக்கப்படாமல் இருந்திருந்தால்...........
தமிழ்நாடு இந்நேரம் சங்கிகளின் கோரப்பிடியில் சென்றிருக்கும்.!
இந்த ஒற்றைக் காரணத்திற்காகத்தான் ராமதாசு, விஜயகாந்த் போன்ற RSSன் அல்லக்கைகளும், தமிழிசை, முருகன், அண்ணாமலை போன்ற RSSன் அடிமைகளும் நீங்கள் அந்த டிவியா என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கிண்டல் செய்வது.!
எப்படியாவது சன் டிவியை ஓரங்கட்டி விட்டால்., அவர்களின் திட்டத்தை மக்களிடம் திணித்து விடலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு.!
 காரணம் புதிய தலைமுறை, விஜய் டிவி, தந்தி, News 7, News 18, Polimer எல்லாம் அவர்களின் கட்டுப்பாட்டில்.!


சன் டிவி மட்டும் அவர்களால் வளைக்க முடியாத அதே வேளையில் மக்கள் மனதில் ஆழமாக பதிந்த தொலைக்காட்சியாக உள்ளது.!
இந்த சூழ்ச்சியை உணராத மற்ற ஊடக தலைகள், சன் டிவி அசிங்க பட்டதை மனதிற்குள் ரசிப்பது அருவருக்கத்தக்கதாக இருக்கிறது.!
நம்மை சுற்றி மிகப்பெரிய சூழ்ச்சி வலை பின்னப்படுகிறது என்பதை உணரவில்லை என்றால்..,
 

தமிழ்நாடு பிற்போக்குவாதிகளின் கைகளில் மாட்டிக் கொள்ளும்.!
5 விவாத விருந்தினர்கள் இருக்கும் போது திடீரென திரு. B R Sreenivasan தொலைபேசி வழியே விவாதத்தில் நுழைய முடிகிறது என்றால்..,
திரு. Karthigaichelvan அனுமதி வழங்க கட்டாயப்படுத்த பட்டாரா, இல்லை அவரே விரும்பி அனுமதி வழங்கினாரா.!
திரு. Ramki Jenraam K கோபப்படுபவர் இல்லை, ஆனால் அவரே கோபப்படும் படியாக திரு. R Sreenivasan நடந்து கொண்டாரா.!
அதனை திரு. Karthikeyan புன்னகையோடு கடந்து செல்கிறார்.!
குஜராத்தில் பாஜக வெற்றிபெற்று, காங்கிரஸ் தோற்றாலோ அல்லது காங்கிரஸ் வெற்றிபெற்று, பாஜக தோற்றாலோ தமிழ்நாட்டில் உள்ள கோலாகல சீனிவாசன்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது.!
குஜராத் மாடல் என்று வாய் கிழிய பேசுவதால் எதை சாதிக்க நினைக்கிறார்கள்.!
 

திராவிட மாடல் இவர்களுக்கு சுகபோக வாழ்க்கையை கொடுத்துள்ளதா இல்லை குஜராத் மாடலா.!
நோபல் பரிசு பெற்ற திரு. அமர்த்தியா சென் போன்ற பல அறிஞர்கள் தமிழ்நாட்டின் சமூக பொருளாதார மாடல்தான் மானிடத்திற்கே சிறந்த மாடல் என்று கூறும்போது
கோலாகல சீனிவாசகன்கள் மட்டும் ஏன் குஜராத் மாடலை தூக்கி சுமக்கின்றனர்.!
 

ஏறத்தாழ 27 ஆண்டுகள் குஜராத்தை ஆண்டு வருகிறது பாஜக. அதில் 15 ஆண்டுகள் மத்தியிலும் இவர்களுக்கு ஆதரவாக பாஜக ஆட்சி.!
நிறைய தொழிலதிபர்கள், Lot of Ports, Favourable Arab and West world Connectivity, Textile industries, Pharmaceutical industries, Delhi - Mumbai Industrial Corridor, First Freight Corridor, First Double Lane, First Express way என்று காங்கிரஸ் உருவாக்கி வைத்த கட்டமைப்புகளை கொண்டு 27 ஆண்டுகால பாஜக அரசு சாதித்தது என்ன.!
ஆனால், 1967 முதல் கோலாகல சீனிவாசன்களும், வெங்கட்ராமன்களும் டெல்லியில் உக்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு எதிராக திராவிட ஆட்சிகளுக்கு எதிராக நடந்து கொண்டிருந்த போதும், தமிழ்நாட்டை கல்வி, மருத்துவம், உட்கட்டமைப்புகளில் முதல் மாநிலமாகவும், 24 லட்சம் கோடியுடன் GSDPயில் நாட்டின் இரண்டாவது மாநிலமாகவும் உயர்த்தியுள்ளனர் என்றால் எமது தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் குறிப்பாக கலைஞரின் உழைப்பு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்.!
 

அதற்கு பின்னணியில் 17 ஆண்டுகால நீதிக்கட்சி ஆட்சி, பெரியாரின் சமூக சிந்தனை பரப்புரை, காமராஜரின் பெரியாரிய சிந்தனை, 1967-76ல் அண்ணா, கலைஞர் இட்ட சமூக பொருளாதார அடித்தளம், அதனை சிதைக்காமல் அடுத்த நிலைக்கு எடுத்து சென்ற திரு. ராமச்சந்திரன்  என்ற மிகப்பெரிய போராட்ட அரிசியல் வரலாறு உள்ளது.!
இந்த இடத்தில் வந்து குஜராத் மாடல், இந்து இந்து என்றால் எவருக்கும் கோபம் வருமா, வராதா.!
 

புதிய தலைமுறையில் திரு. கார்த்திகை செல்வன் இருந்தபொழுது ஒரு நிகழ்ச்சியில் திரு. Mathimaran V Mathi பேசம்போது கோலா என்று கோலாகல சீனிவாசனை மேற்கோள் காட்டுவார்., உடனே கார்த்திகை செல்வன் நீங்க அவரது முழுப்பெயரை சொல்லுங்கள் என்று செல்லமாக கண்டிப்பார்.! ஆனால் அந்த கோலாகல சீனிவாசன் எப்போதுமே திமுகவை தீம்கா, தீம்கா என்பார்.! அவரை கார்த்திகை செல்வன் உட்பட யாரும் கண்டித்தது கிடையாது.!
ஏன், திமுக எவருடைய உணவில் விஷம் வைத்தது, திமுக மீது அவ்வளவு வன்மம்.!?
 

பாஜகவின் நேரடி பிரதிநிதியாக இல்லாமல் வலதுசாரி, நடுநிலை, விமர்சகர், சூழலியாளர், காப்பாளர் என்ற போர்வையில் வருபவர்கள் பாஜகவின் கொள்கைகளை மட்டுமே பேசுவதற்கு திருமதி. Sugitha Sarangaraj உட்பட அனைவரும் எப்படி அனுமதிக்கலாம்.!
தமிழ்நாடு உத்திரபிரதேசம்,  பிஹாராக மாறாமல் இருக்க வேண்டும் என்றால் கலைஞர், ஸ்டாலின்கள் மட்டும் உழைத்தால் போறாது..,
ஒவ்வொருவரும் திராவிட சித்தாந்தத்தை உள்வாங்கி வினையாற்ற வேண்டும்.!
 

ஊடக வெளிச்சம் என்பது ஒரு போதை., ஆனால் அது நமது எண்ணத்திற்கு எதிராக இருக்க கட்டாயப்படுத்தும் என்றால் திரு. Gunaa Gunasekaran திரு. Senthil Vel போன்று வெளியேறி விடுங்கள்.!
வீட்டிற்குள் புகுந்த பாம்பை அடிக்க நெருப்பில் வாட்டிய மூங்கில் கம்பிற்காக காத்திருப்பேன் என்று அறியாமையில் அடம்பிடிக்காமல், அருகில் இருக்கும் அழுக்கு வேட்டி இருந்தால் கூட அதை வைத்து அந்த பாம்பை விரட்ட வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும்.!
 

உங்கள் கையில் திமுக என்ற சவுக்கு கம்பு உள்ளது.,
அதனை முறையாக பயன்படுத்தி அந்த நச்சுப் பாம்பை விரட்ட வேண்டிய கடமை உங்கள் அனைவருக்கும் உள்ளது என்பதை மனதில் கொண்டு பணியாற்றினால் மட்டுமே தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக