திங்கள், 5 டிசம்பர், 2022

ஜெயலலிதா ஜாதக அப்டேட் .. சனி, 14 மே, 2016

 இவருக்கு 22-08- 2012  இல் இருந்து குரு திசை ஆரம்பம் இது 2028 வரை இருக்கும்.  மூலம் நட்சத்திரத்தில் அமைந்து உள்ள குருவானவர் அதீத பலத்தை கொடுத்து திடீரென்று பிரச்சனைகளையும் கொடுத்து விடுவார்.  அவற்றில் இருந்து மீள்வதற்குள் போதும் போதுமென்றாகிவிடும்.அதிலும் குரு திசையில் நடப்பதோ சனி புத்தி. குருவுக்கு சனி அமைந்திருப்பது அதன் எட்டாவது ஸ்தானத்தில். சனிக்கு குரு அமைந்திருப்பது ஆறாவது ஸ்தானம். சஷ்டாஷ்மமம்  என்று சொல்வார்கள். இதில் ஏராளமான தோல்விகள் தொல்லைகள் எல்லாம் ஏற்படும். உயரத்தில் இருப்பது போல் தோன்றினாலும் இருப்பது என்னவோ படுகுழியில்தான். தர்ம வழியில் நடந்தால் மட்டுமே மீள முடியும். ஆனால் எதிலும் குறுக்கு வழியை நாடும் கிரிமினல் தனம் இவரிடம் நிறையவே உண்டு. கோவில் பராமரிப்பு கிரகசாந்தி ஒன்றுமே கைகொடுக்காது. விழுங்கியது கடப்பாரை .. சுக்கு கஷாயம் என்ன செய்யும்?இவர் யார் சொன்னாலும் எதையும் கேட்கமாட்டார். எல்லோரையும் பயன் படுத்துவார்.   2016/05 jayalalithaa horoscom

வியாழன், 12 மே, 2016

ஜெயலிதா ஜாதகம்....குரு திசை சனி புத்தி...

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஜாதகம் உண்மையிலேயே   மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு சாதகமாகும். மிகப்பலம் வாய்ந்தவர் என்று கருதப்படும் இவர் உண்மையில் மிகவும் பலம் குறைந்தவர். இவரது இயலாமையை இவர் மறைக்க போடும் வேஷங்களில் பல. அதில் ஒன்றுதான் சதா பிறரை தன்காலில் விழவைக்கும் வியாதி.  . ஒரு விபரீத  ஜாதகம் என்பது இவரது ஜாதகம்தான். எவ்வளவுக்கு எவ்வளவு அதீத
அதிஷ்டம் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு துரதிஷ்டமும் இவருக்கு இருக்கிறது.எவ்வளவு பிரமாண்டமான வெற்றிகளை சினிமாவிலும் அரசியலிலும் பெற்றிருந்தாலும் சதா நீதிமன்றம் சிறை வாசம் விசாரணை போன்ற துரதிஷ்டங்கள் இவரை தூங்க விடாமல் செய்யும். 
எவ்வளவு பெரிய பெரிய வெற்றிகளை இவர் அடைந்தாலும் இவர் ஒரு போதும் திருப்தி அடைவதே இல்லை . அதுதான் இவரது ஜாதகம்.
மூன்றாவது வீட்டில் அமைந்துள்ள  செவ்வாயும்  சந்திரனும்  மிக மோசமான   சசிமங்கள யோகத்தை கொடுக்கிறார்கள். இது ஒரு வகையான சண்டாள யோகம் என்று சாஸ்திரம் கூறுகிறது. அதுவும் சிங்கராசியில்... இது இவருக்குள் ஒழிந்து கொண்டிருக்கும் சர்வாதிகார ஆசைக்கு காரணம்.
1987 இல் இருந்து 1994 வரை செவ்வாய் திசை. அதன் பின்   1994 இல் இருந்து 2012 ஆவணி 22 வரை இவருக்கு ராகு திசை நடைபெற்றது . அது பதினோராம் வீட்டில் ( செவ்வாயின் வீடு ) பரணி நட்சத்திரத்தில் இருந்தது பரணி தாரணி ஆளும் என்பதற்கு ஏற்ப ஆட்சி அதிகாரத்தை கொடுத்தது.   
இவரது கிரக நிலையில் வாக்குஸ்தானத்தில் வக்கிரம் பெற்றிருக்கும் சனி மிகவும் பலமாக இருக்கிறார். எனவே இவர் மிகவும் பொய் சொல்ல கூடியவர் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. சனி ஆழமான நடிப்பு சங்கீதம் கலை போன்றவற்றில் திறமையையும் கொடுக்கும். 
இவரது இந்த திறமை எல்லாம் தவறான உபயோகத்துக்கே பயன்பட்டதால் அதன்  பலனை அனுபவிக்கிறார்.
ராஜ குடும்பத்தில் பிறந்து அடிக்கடி வழக்கு கேஸ் சிறைவாசம் விசாரணை என்பவற்றை எல்லாம் இவர் சந்திக்கவேண்டி இருப்பதுதான் இவரின் விபரீத அசுர ஜாதக பலனாகும்.
தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் குருதிசை சனி புத்தி மனம் மிகத்தவறான வழியிலேயே செல்லும் என்பதை காட்டுகிறது. ஏனெனில் குரு அமைந்திருப்பது  மூலம் நட்சத்திரத்தில். இந்த மூலம் நட்சத்திரம் ஆண் பெண் போன்ற இரு பாலருக்கும் நன்மை செய்வது போல  பாவனை காட்டி  தீமையைதான் செய்துவிடும் .
ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்பது பாதிதான் உண்மை. இது உண்மையில் இரு பாலாருக்குமே அரச போகத்தையும் கொடுக்கும் ஆனால் எல்லாவற்றையுமே நிர்மூலமாக்க கூடிய மோசமான பலனும் இந்த நட்சத்திரத்துக்கு உண்டு.
ஜெயலைதாவுக்கு இப்போது நடக்கும் குரு இந்த மூலம் நட்சத்திரத்தில் இருப்பதால் இரண்டு பலனுமே உண்டு.
 இன்னும்  விரிவாக சொல்லவேண்டும் என்றால். இந்த மூலம் நட்சத்திரம் அளவு கடந்த சக்தியை அதிஷ்டத்தை கொடுக்கும்.
அந்த அதிஷ்டத்தை நிரந்தரம் என்று எண்ணி தவறுக்கு மேல் தவறு செய்பவர்கள் தான் இன்றய உலகில் அதிகம்.
அதிலும் ஜெயலலிதாவின்  சனி எட்டாம் ஒன்பதாம் வீட்டுக்கு அதிபதியாகி வாக்கு ஸ்தானமாகி இரண்டில் உள்ளார்.
ஒன்பதாவது அதிபதி ஸ்தானம் இவருக்கு பேச்சு வல்லமையை கொடுத்தது. எட்டாவது ஸ்தானம் பொய் சொல்லும் ஆற்றலை கொடுத்தது.
நான் சொல்வதை பிறர் நம்புகிறார்கள் என்று அறிந்ததும் மூன்றாம் வீட்டில் இருக்கும் செவ்வாய் சந்திரன் கலகக்காரர்கள்(சசி மங்கள் யோகம்) தங்கள் புத்தியை காண்பித்து விட்டார்கள்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு அம்சம் என்னவென்றால்.இவரது ஜென்மலக்கினம் திருவாதிரை நட்சத்திரத்தில் அமைந்து இருக்கிறது. அதன் அதிபதி ராகு பதினோராம் இடத்தில வெள்ளியின் நட்சத்திரத்தில் (பரணி) இருக்கிறது. இவர் ஒரு சுகபோகி. சுயநலவாதி. வாழ்கையை மிகவும்  ரசிப்பவர். கொஞ்சம் நேர்மை இருந்திருந்தால் இவர் ஒரு மிகப்பெரிய தேவதையாக இருந்திருப்பார். பேராசையும் அதற்காக எந்த அளவு பொய்யும் கூறக்கூடிய வல்லமையும் இவருக்கு இவரே உருவாக்கி கொண்ட எதிரிகளாகும்.
அதிகாரத்தை விட்டு விலகி சாதாரண வாழ்க்கை வாழ முயற்சித்தால் இவருக்கு உலகம் போற்றும் புகழ் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் இவர் சதா பொய்யாக புகழும் கீழ்நிலை மனிதர்களின் சகவாசத்திலேயே மகிழ்வு அடைவார்.  அதுதான் சசி மங்கள யோகம்(சந்திரன் செவ்வாய்) என்பதன் பொருள்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக