dinamalar.com : ஹைதராபாத்-'சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி என்னை ஏமாற்றி விட்டார்' என கூறி, தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் வாசு அலுவலகம் முன், நிர்வாண போராட்டம் நடத்திய நடிகையை போலீசார் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.
தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான வாசு, பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், ''தயாரிப்பாளர் வாசு, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி என்னை ஏமாற்றி விட்டார்,'' என நடிகை சுனிதா போயோ என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், வாசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாசுவின் அலுவலகம் முன், நேற்று நிர்வாணமாக அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
நடிகையின் இந்தப் போராட்டம் காரணமாக, தெலுங்கு சினிமாவில் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் பிரபலங்கள் வசிக்கும் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியிலும் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த போலீசார், நடிகை சுனிதாவுக்கு ஆடைகளை அணிவித்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், தற்போது வெளியூரில் இருக்கும் வாசு ஹைதராபாத் வந்தவுடன் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், இதற்கு முன் சுனிதா பல முறை புகார் அளித்தும், வாசு மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக