வியாழன், 3 நவம்பர், 2022

ஆளுநரை திருப்பி அனுப்ப முடிவு - திமுகவின் திட்டம் பலிக்குமா? பிளானோடு இறங்கிய CM ஸ்டாலின்!

tamil.oneindia.com  -   Shyamsundar   :  சென்னை: ஆளுநர் ஆர். என் ரவியை திரும்ப பெறுவது தொடர்பாக கூட்டணி கட்சிகளிடம் ஆளும் திமுக தரப்பு கையெழுத்து வாங்கி வருகிறது. இதனால் ஆளுநருக்கு எதிரான அழுத்தம் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி, திமுக அரசுக்கு இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று திமுக மற்றும் தோழமைக்கட்சிகளின் தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டனர்.
திமுக, காங்கிரஸ், மதிமுக, மமக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தவாக, கொமதேக, திக உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக சேர்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கை ஆளுநருக்கு மிகப்பெரிய அளவில் அழுத்தத்தை கொடுத்தது.
சூடு பிடித்த களம்.. ஆளுநருக்கு எதிராக திமுக பெரிய மூவ்! அவசரமாக டெல்லி பறக்கும் ரவி! என்ன நடக்குது? சூடு பிடித்த களம்.. ஆளுநருக்கு எதிராக திமுக பெரிய மூவ்! அவசரமாக டெல்லி பறக்கும் ரவி! என்ன நடக்குது?
அறிக்கை
அதில், தமிழ்நாடு ஆளுநராக ஆர் என் ரவி பொறுப்பேற்றது முதல் நாள்தோறும் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதற்குக் காரணம், தமிழகத்தில் தேவையற்ற வீண் சர்ச்சைகளை உருவாக்கி குழப்பம் ஏற்படுத்தும் நோக்கமோ, அல்லது தன்னை நோக்கிய கவனிப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்று தாகமா என தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் சனாதனம், ஆரியம், திராவிடம், பட்டியலின மக்கள், திருக்குறள் குறித்து அவர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும் ஆபத்தானவையாகவும் இருக்கின்றன. ஆளுநரின் தனிப்பட்ட ஆன்மீக நம்பிக்கைகள் குறித்து நமக்கு எந்த விமர்சனமும் இல்லை. அதுபற்றி கவலைப்படவுமில்லை, என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆளுநர் ஆர். என் ரவி
இதையடுத்து தற்போது ஆளுநர் ஆர். என் ரவியை திரும்ப பெறுவது தொடர்பாக கூட்டணி கட்சிகளிடம் ஆளும் திமுக தரப்பு கையெழுத்து வாங்கி வருகிறது. திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்து இந்த குறிப்பாணையில் கையெழுத்து போட வேண்டும். அதை குடியரசுத் தலைவரிடம் கொடுக்க உள்ளோம். ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று திமுக எம்பி பொருளாளர் டி ஆர் பாலு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான காலக்கெடு இன்றோடு முடிகிறது.

ஆதரவு
இந்த நிலையில் இன்று திமுக கூட்டணி கட்சிகள் அறிவாலயம் சென்று, ஆளுநருக்கு எதிரான குறிப்பாணையில் கையெழுத்து போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது கையெழுத்து போடப்பட்ட குறிப்பாணையை அறிவாலயத்திற்கு பிரதிநிதிகள் மூலம் கூட்டணி கட்சிகள் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில், காங்கிரஸ், மதிமுக, மமக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தவாக, கொமதேக, திக உள்ளிட்ட கட்சிகள் திமுக உடன் நிற்கின்றன.

திமுக
இந்த நிலையில்தான் காங்கிரஸ் மூத்த தலைவர் எம்பி ப சிதம்பரம் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் செய்துள்ள ட்வீட்டில், தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற மனுவை ஆதரிக்கிறேன் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் இதில் கண்டிப்பாக கையெழுத்திட வேண்டும் என்று ப. சிதம்பரம் குறிப்பிட்டு இருக்கிறார். இதையடுத்து இன்று காங்கிரஸ் எம்பிக்கள் அறிவாலயத்தில் ஆளுனருக்கு எதிராக கையெழுத்து போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக