புதன், 16 நவம்பர், 2022

நளினி என்னும் நன்றி.. மலையக கவிஞர் எஸ்தர்

May be an image of 1 person and waterfall

Esther Nathaniel        நளினி என்னும் நன்றி
இலங்கை ஊடகங்களை விட இந்திய ஊடகத்தில் அதிலும் தமிழ் நாட்டின் ஊடகங்களில் இப்போது ஒருபரபரப்பு என்றால் அது முன்னாள் பிரதமர் அமரர் ரஜுவ்காந்தியின் படுகொலையில் உள்ளே போன நளினி உட்பட ஆறுபேரின் விடூதலையைப்பற்றியது
நளினி அவர்களும் அவர் சார்ந்த ஆறு பேர்களும் சுமூகமாக இன்று இத்தனைப்பெரிய தமிழ்நாட்டில் திமுகவின் ஆட்சி நடந்து கொண்டிருக்கும்போது இந்த அம்மா வெளியியில் வந்து பேட்டி  மேல் பேட்டி போட்டிப்போட்டுக் கொண்டூ கொடுத்துக்கொண்டிருக்கிறார். மக்கள் மனதைக் கெடுத்துக்கொண்டிருக்கிறார்.
என்ன சொல்கிறார் அம்மா  அமரர் ஜெயலலிதாவின் சமாதிக்கு போகணுமாம் சரி போ போம்மா நீ எங்கேயும் போ
 ஆனால் உன்னை வெளிவரபாடுபட்ட வை கோபால்சாமி கோபால்சாமின்னு ஒருத்தரை தெரியுமா போய் பார் நன்றிசொல்லு கிடந்து முறிஞ்சி அரும்பாடுபட்ட வைகோவை போய் பார்
  கலைஞர் ஆட்சியில்தான் நளினி உட்பட ஆறுபேருக்கும் தூக்குதண்டனை ஆயுள் தண்டனையானது காரணம்  நளினிக்கு ஒரு பெண் குழந்தை இருந்தமையே அக்குழந்தைக்காக திருமதி சோனியாகந்தி அவர்களும் கலைஞரின் அவ் தீர்மானத்துக்கு இணங்கினார் .


நேரடியாவே மிக இள வயதில் சோனியா விதவையானார்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட அந்த அம்மாவே தூக்கினை ஆயுளாக மாற்றினார்.
 ஆனால் இப்போ நளினி வெளியில் வந்து எடப்பாடிக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறார் அவர் விடுதலைக்காக இராப்பகலாய் போராடியவர்கள் இந்தம்மா பேசாம உள்ளேயே இருந்திருக்கலாம் என மனதில் வெம்பிக்கொண்டிருக்கிறார்கள் வெண்ணெய் திரண்டு வரும்போது தாளியை உடைக்கும் நளினியின் செயல் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கலைஞர் ஆட்சியில்தான் தமிழத்தில் பல நலனோன்பு திட்டங்கள் வந்தது ரஜீவின் கொலையால் திமுக அப்போது படுதோல்வியடைந்தது மக்களுக்கு கிடைக்வேண்டிய நன்மைகளும் திட்டங்களும் இல்லாதுப்போனது.
இந்த நேரத்தில்  கைதான நளினியின் விடுதலைக்காக அன்றிலிருந்து இன்று வரை போராடியது திமுக. தான் அது முழு உலகத்துக்குமே தெரியும்.
அ ந்த மனிதரின் சமாதிக்கு போகாமல் அம்மாதான் சட்டப்பேரவையில் விடுதலைக்காக தீர்மானம் நிறைவேற்றினார்ன்னு பேட்டியை போடுகிறார் நளினி.
நளினியின்  இந்த நகர்வு மிக மோசமான விளைவுகளை பிற்காலத்தில் நளினிக்கு  உருவாக்கப்போகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி
 அவர் பேசாமல் புருசனை ஒரு கையிலும் பெட்டியை ஒரு கையிலும் பிடித்துக்கொண்டு லண்டன் போய் பேரனையோ பேத்தியையோ வளர்ப்பது சாலச்சிறந்தது அன்றேல் சுமூகமான திமுகவின் ஆட்சியில் தேவையில்லாத சலசலப்பை ஏற்படூத்தி பேட்டிக்கொடுத்து மக்களை குழப்புவதில் எப்பயனும் இல்லை அவரின் எதிர்காலத்துக்கு எந்த உத்தரவூம் இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக