வெள்ளி, 4 நவம்பர், 2022

பலதாரமணத்திற்கு ஆதரவான பெண்களே உங்கள் கணவருக்கு நான்கு கல்யாணத்தை .. மேடைக்கு வாருங்கள்.

Sharmila Seyyid  :   பலதாரமணத்திற்கு ஆதரவாக பல பெண் சட்டத்தரணிகள் கொம்பு சீவிக் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.
 இஸ்லாமிய சமூகத்தைப் பாலியல் வரட்சியிலிருந்து காப்பாற்றத்தக்க வரப்பிரசாதம் பலதாரமணம் என்பது வரையில் உளறிக் கொட்டுகிறார்கள்.
இவர்கள் ஆண்களின் மூளையில் பேசுகிறார்கள் என்ற என் முன்னைய ஒப்பீடுகள் ஒன்றும் இந்த சாமி மாடுகளுக்குப் பொருந்தாது.
ஆண்களே இவர்களுக்குள் புகுந்து சாமியாடுகிறார்கள்.
 பலதாரமணத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பும் சட்டத்தரணி பெண்களே உங்கள் கணவருக்கு நான்கு கல்யாணத்தை முடித்து வைத்துவிட்டு மேடைக்கு வாருங்கள்.
உங்கள் கணவரின் இரண்டாம், மூன்றாம், நான்காம் திருமணங்களுக்கு நீங்கள் ஒப்புதல் அளிக்கும் காணொளிகளைப் பதிவேற்றுங்கள்.
நீங்கள் அரபு தேசத்துக் காசுக்குப் பேசவில்லை என்பதையும், நீங்கள் ரியல் அக்டிவிஸ்ட் தான் என்றும் இந்த சமுதாயத்தில் பலதாரமணங்களினால் நெஞ்சுடைந்து குமுறித் திரியும் மாதர்குலம் நம்பட்டும்!

Fathima Farza  :   என்ட சொந்த மாலையை விற்று டிக்கட்டும் வீசாவும் வாங்கிட்டு கல்யாணம் முடித்துப் பத்தாவது நாளிலேயே என்னை விட்டுட்டுப் போன என்ட முன்னாள் கணவர் என் சம்மதம் பெற்றா இன்னொரு கல்யாணம் முடித்தார்?
அதற்கு நியாயம் கேட்டு நான் காதிகோட்டெல்லாம் அலைஞ்சி திரியும்போது அவர் புள்ளையளுக்கு வாப்பாவாகிட்டார்.
இந்த நிதர்சனத்த முழுசா மறச்சி ஷரீஆ சட்டம் என்கிற பேரில பெண்களின் நெஞ்சிலதான் குத்துறார்கள். அதுக்கு பெண்களே துணை என்றால் காரணம் அவங்கட கண்ணை சுகபோக மேட்டுக்குடி வாழ்வும், மதத்தில் நடைமுறையை மிஞ்சிய பற்றுதலும்.

Sharmila Seyyid   :    Fathima Farza அவன் போல நாய்களையெல்லாம் குளுப்பாட்டி நடுவீட்டில் வைக்கத்தான் கொஞ்சம்பேர் துள்ளித் திரிகிறார்கள்.

Fathima Farza  ; Sharmila Seyyid துள்ளுற மாடுகள் பொதி சுமக்கும்போது தெரியும் அதுட வலி

Premraj Thangavel  : தங்கள் கணவன்மாருக்கு இன்னும் மூன்று பெண்களை திருமணம் செய்துவிட்டு வைத்துவிட்டு வந்து நிரூபித்து காட்டினால் நம்பக்கூடியதாக இருக்கும்

Malini Mala : ஆண் பலதாரமணம்? நான் நினைத்தேன் பெண்களுக்காகக் குரல் கொடுக்குமளவு முன்னேறி விட்டோமென

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக