வியாழன், 24 நவம்பர், 2022

குடும்ப பிரச்னை தீர காட்டுக்குள் பாலியல் உறவு.. காதலர்களை கொடூரமாக கொலை செய்த ராஜஸ்தான் போலி மந்திரவாதி !

 kalaignarseithigal.com  -  KL Reshma  :  குடும்ப பிரச்னை தீரவேண்டுமென்றால் காட்டுக்குள் பாலியல் உறவு கொள்ள வேண்டும் என கூறிய இரகசிய காதல் ஜோடியை கொடூரமாக கொன்றுள்ள போலி மந்திரவாதியின் செயல் ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் பகுதியை அடுத்துள்ள பகுதியில் கெலபாவாடி என்ற காட்டுப்பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த நவம்பர் 18-ம் தேதி ஆண் மற்றும் பெண் சடலம் நிர்வாணமாக கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டனர். அப்போது இந்த சடலம் ராகுல் மீனா மற்றும் சோனு குன்வார் என்று தெரியவந்தது.

இதையடுத்து இவர்களை குறித்து விசாரிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமணமாகியுள்ளது. இருப்பினும் இவர்கள் இரு குடும்பத்தினரும் ஒரு கோயிலில் அடிக்கடி சந்தித்து கொண்டதால் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் இரகசிய காதலாக மாறியுள்ளது.

இதனால் ராகுல் தனது மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். காரணம் தெரியாத மனைவியோ, இது குறித்து அந்த கோயிலில் உள்ள பாலேஷ் குமார் என்ற போலி மந்திரவாதியிடம் கேட்டுள்ளார். அப்போது அவர், ராகுலுக்கும் சோனுவுக்கும் உள்ள இரகசிய உறவு பற்றி கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ந்த ராகுல் மனைவி, தனது கணவரிடம் சண்டையிட்டுள்ளார். மேலும் இதனை தனது இந்த கோயில் மந்திரவாதி தான் கூறியதாக தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த ராகுலும், சோனுவும் அந்த மந்திரவாதியிடம் சண்டையிட்டுள்ளனர். மேலும் இதற்கு பழிவங்க போவதாகவும் பகிரங்க மிரட்டல் விடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த மந்திரவாதி அவர்களை கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி ராகுலை தொடர்பு கொண்ட மந்திரவாதி சமாதானமாக பேசியுள்ளார். மேலும் தான் சொல்வதை கேட்டால், உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்னை தீரும் என்றும் கூறியுள்ளார்.

இதை நம்பிய ராகுல் அவர் சொல்வதை கேட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று ராகுல் மற்றும் சோனு இருவரும் மந்திரவாதி கூறிய காட்டுக்குள் சென்றுள்ளனர். அப்போது மந்திரவாதி இருவரிடமும், தாங்கள் காட்டு பகுதியில் முழுவமையாக உடலுறவு கொள்ள வேண்டும்; அப்படி நீங்கள் செய்யும்போது உங்கள் மீது தான் புனித நீரை தெளிப்பதாக கூறினார். அதனை நம்பிய இவர்களும் அப்படி செய்துள்ளார்கள்.

அப்போது புனித நீரை தெளிப்பதாக கூறிய மந்திரவாதி, தான் வாங்கி வைத்திருந்த சுமார் 50 பாக்கெட் பசையை (FeviQuick) அவர்கள் மீது குறிப்பாக முகம் தலை உள்ளிட்ட பக்கங்களில் ஊற்றியுள்ளார். இதில் இறுக்கமாக ஒட்டிக்கொண்ட அவர்கள், தங்களை பிரிக்க இயலவில்லை; முயன்றும் சதையோடு பிய்த்து வந்துள்ளது. இதனால் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிக்காமல் இருந்துள்ளனர்.

அப்போது அவர்களை கத்தியால் கழுத்தை அறுத்தும், கல்லை தூக்கி போட்டு கொன்றும் உள்ளார் இந்த மந்திரவாதி. பின்னர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மந்திரவாதியை கைது செய்த போலீசார், இது குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொடூர சம்பவம் குறித்து காவல்துறையினர் சுமார் 200 பேர் மற்றும் 50 சிசிடிவி கேமாரக்கள் உதவியுடன் கண்டறிந்துள்ளனர். குடும்ப பிரச்னை தீரவேண்டுமென்றால் காட்டுக்குள் பாலியல் உறவு கொள்ள வேண்டும் என கூறிய இரகசிய காதல் ஜோடியை கொடூரமாக கொன்றுள்ள போலி மந்திரவாதியின் செயல் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக