செவ்வாய், 15 நவம்பர், 2022

லிங்காயத் மடாதிபதி சிறுமிகளை மிரட்டி மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் ..சிறுமிகள் சாட்சியம்

Shivamurthy Sharanaru

tamil.samayam.com சாக்லேட் சாப்பிட்டதும் மயக்கம்.. அதன்பின் உடலெல்லாம் வலி..லிங்காயத் மடாதிபதிக்கு எதிராக சிறுமிகள்.!
கர்நாடகாவில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக, 64 வயதான லிங்காயத் சமூக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு உள்ளார். லிங்காயத் மடங்களை ஆன்மிகப் பள்ளிகளாக மாற்றியதில் பிரபலமான இவர், பெங்களூரில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள சித்ரதுர்காவில் உள்ள முருகா மடத்தால் நடத்தப்படும் பள்ளியில், மைனர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி கடந்த செப்டம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்கு தலைமை தாங்கிய சித்ரதுர்கா காவல் கண்காணிப்பாளர் கே.பரசுராம் கடந்த காலங்களில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "குழந்தைகள் எதிர்க்கும் போதெல்லாம், மயக்க மருந்து தடவிய ஆப்பிள்களை அவர்களுக்கு கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார்" என்று கூறினார்.

இந்தநிலையில் இந்த வழக்கு இன்று உள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவரால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி மாஜிஸ்திரேட் முன் கூறும்போது, "அவர் ஏதாவது சாக்லேட்டுகளை வழங்குவார். அவர் அருகில் உட்கார வைத்து, மது அருந்துவார். பின் எனது ஆடைகளை கழற்றி பலாத்காரம் செய்வார். நாங்கள் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் என்று கெஞ்சியும் விடாமல் பலாத்காரம் செய்தார்.

சில நேரங்களில் சாக்லேட்டுகளை வழங்குவார். அவற்றை சாப்பிட்டதும் நாங்கள் மயக்கமடைந்து விடுவோம். அதன் பிறகு என்ன நடந்தது என தெரியாது. ஆனால் உடல் முழுவதும் பெரும் வலியாக இருக்கும். அவர் வார்டன் ராஷ்மி மூலம் தனது அறைக்கு பெண்களை அனுப்ப வைத்தார். ஒரு சில நேரங்களில் கத்தி முனையில் பலாத்காரம் செய்யப்பட்டோம்’’ என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து 16 வயதுள்ள சிறுமி கூறும்போது, "வார்டன் ராஷ்மி என்னை ஒரு பின்கதவு வழியாக சுவாமி அறைக்கு அனுப்பினார். நான் உள்ளே நுழைந்தபோது, அவர் குடிப்பதைக் கண்டேன். அவர் எனக்கு பழங்களை வழங்கினார், சாப்பிட்ட பிறகு நான் மயங்கி விழுந்தேன். நான் சுயநினைவு திரும்பியபோது, என்னிடம் ஆடை இல்லை, அவர் என்னை மிரட்டினார். நான் ஒத்துழைக்க மறுத்தபோது கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்தார். ஸ்வாமியின் அறைக்கு மாணவர்கள் செல்ல மறுத்தால், வார்டன் ராஷ்மி அவர்களை அடிப்பார். இப்படி பலமுறை என்னை பலாத்காரம் செய்தார்’’ என அந்த சிறுமி மாஜிஸ்திரேட் முன் கூறினார்.

இதையடுத்து சிவமூர்த்தி சரணகுருவுக்கு எதிராக மேலும் திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளதால், அவரது நீதிமன்றக் காவலை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர் குறைந்தது இன்னும் ஒரு வாரமாவது சிறையில் இருப்பார் கூறப்படுகிறது. tamil.samayam.com சாக்லேட் சாப்பிட்டதும் மயக்கம்.. அதன்பின் உடலெல்லாம் வலி..லிங்காயத் மடாதிபதிக்கு எதிராக சிறுமிகள்.!
கர்நாடகாவில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக, 64 வயதான லிங்காயத் சமூக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணகுரு உள்ளார். லிங்காயத் மடங்களை ஆன்மிகப் பள்ளிகளாக மாற்றியதில் பிரபலமான இவர், பெங்களூரில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள சித்ரதுர்காவில் உள்ள முருகா மடத்தால் நடத்தப்படும் பள்ளியில், மைனர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி கடந்த செப்டம்பர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்கு தலைமை தாங்கிய சித்ரதுர்கா காவல் கண்காணிப்பாளர் கே.பரசுராம் கடந்த காலங்களில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "குழந்தைகள் எதிர்க்கும் போதெல்லாம், மயக்க மருந்து தடவிய ஆப்பிள்களை அவர்களுக்கு கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார்" என்று கூறினார். இந்தநிலையில் இந்த வழக்கு இன்று உள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவரால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி மாஜிஸ்திரேட் முன் கூறும்போது, "அவர் ஏதாவது சாக்லேட்டுகளை வழங்குவார். அவர் அருகில் உட்கார வைத்து, மது அருந்துவார். பின் எனது ஆடைகளை கழற்றி பலாத்காரம் செய்வார். நாங்கள் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் என்று கெஞ்சியும் விடாமல் பலாத்காரம் செய்தார்.

சில நேரங்களில் சாக்லேட்டுகளை வழங்குவார். அவற்றை சாப்பிட்டதும் நாங்கள் மயக்கமடைந்து விடுவோம். அதன் பிறகு என்ன நடந்தது என தெரியாது. ஆனால் உடல் முழுவதும் பெரும் வலியாக இருக்கும். அவர் வார்டன் ராஷ்மி மூலம் தனது அறைக்கு பெண்களை அனுப்ப வைத்தார். ஒரு சில நேரங்களில் கத்தி முனையில் பலாத்காரம் செய்யப்பட்டோம்’’ என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து 16 வயதுள்ள சிறுமி கூறும்போது, "வார்டன் ராஷ்மி என்னை ஒரு பின்கதவு வழியாக சுவாமி அறைக்கு அனுப்பினார். நான் உள்ளே நுழைந்தபோது, அவர் குடிப்பதைக் கண்டேன். அவர் எனக்கு பழங்களை வழங்கினார், சாப்பிட்ட பிறகு நான் மயங்கி விழுந்தேன். நான் சுயநினைவு திரும்பியபோது, என்னிடம் ஆடை இல்லை, அவர் என்னை மிரட்டினார். நான் ஒத்துழைக்க மறுத்தபோது கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்தார். ஸ்வாமியின் அறைக்கு மாணவர்கள் செல்ல மறுத்தால், வார்டன் ராஷ்மி அவர்களை அடிப்பார். இப்படி பலமுறை என்னை பலாத்காரம் செய்தார்’’ என அந்த சிறுமி மாஜிஸ்திரேட் முன் கூறினார்.

இதையடுத்து சிவமூர்த்தி சரணகுருவுக்கு எதிராக மேலும் திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளதால், அவரது நீதிமன்றக் காவலை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர் குறைந்தது இன்னும் ஒரு வாரமாவது சிறையில் இருப்பார் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக