வெள்ளி, 18 நவம்பர், 2022

பெட்ரோல் குண்டு வீசி ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டி கொலை.. காஞ்சிபுரம் மாவட்டம்

Panchayat council president incident kanchipuram police investigation

  நக்கீரன் : காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் அருகே உள்ள மாடம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக வெங்கடேசன் என்பவர் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில்,
நேற்று (17/11/2022) இரவு அவரது தொலைபேசிக்கு அழைப்பு வந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, ராகவேந்திரா பாலம் அருகே வெங்கடேசன் வந்த போது, அங்கு மறைந்திருந்த கும்பல் அவர் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்கியுள்ளது.


படுகாயமடைந்து கீழே விழுந்த வெங்கடேசனை கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அந்த கும்பல் தப்பியோடி உள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் காவல்துறையினர் வெங்கடேசனின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாடம்பாக்கம் ஊராட்சியில் பதற்றமான சூழல் நிலவுவதால் 40-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக