திங்கள், 21 நவம்பர், 2022

ரிலீஸ் ஆன மறுநாளே .. கலகத்தலைவன் வசூலில் ஏற்பட்ட சிக்கல்

kalaga-thalaivan-movie

cinemapettai.com -  ByHashini  :  நடிகர், அரசியல்வாதி, தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட உதயநிதி ஸ்டாலின் தற்போது பல திரைப்படங்களை தனது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக திரையரங்குகளுக்கு விநியோகம் செய்து வருகிறார்.
இப்படி அரசியலிலும் சினிமாவிலும் செல்வாக்காக இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் புதிய படமான கலகத் தலைவன் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன உடனே இணையத்திலும் ரிலீஸ் ஆகி பட குழுவை பதற வைத்திருக்கிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து முடித்த கலகத் தலைவர் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.


இதற்கு முன்பே இந்த படத்திற்கான பட ப்ரோமோஷன் பணிகளை படு ஜோராக உதயநிதி நடத்தினார். அதன் பிறகு திரையரங்குகளிலும் இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற ஆர்வத்தில் ரிலீஸ் செய்தனர். ஆனால் ரிலீஸ் ஆன பின் இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வெற்றி கிடைக்கும் என்று படக்குழு நம்பினார்கள்.

ஆனால் இப்போது இந்த படம் இணையத்தில் லீக் ஆகி இருப்பது படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தில் உதயநிதி உடன் பிக் பாஸ் ஆரவ், கலையரசன் உள்ளிட்டோரும் இணைந்து நடித்திருப்பதால் அவர்களுக்கும் இந்த படத்திற்குப் பிறகு நல்ல சினிமா கேரியர் இருக்கும் என்று நம்பினார்கள்.

இப்போது இப்படி நடந்திருப்பது அனைவருக்கும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்த படத்தை தன்னுடைய சொந்த தயாரிப்பில் தயாரித்திருக்கும் உதயநிதி, நிச்சயம் படம் இணையத்தில் லீக் ஆனதற்கு ஏதாவது நடவடிக்கை எடுப்பார் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

அத்துடன் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி, இதற்கு முன்பு இயக்கியிருந்த தடம் பட அளவுக்கு விறுவிறுப்பாக இல்லை என்றாலும், இந்த கலகத் தலைவன் பார்க்கும் ரகம் தான் என்றும் ரசிகர்கள் விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக