திங்கள், 14 நவம்பர், 2022

ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த கலைஞர் . உலகமே போற்றிய கண்ணொளி திட்டம்.. திடீர் டிரென்ட்

பார்வை குறைபாடு

tamil.oneindia.com  -  Vishnupriya R  :  சென்னை: உலகமே போற்றும் இலவச கண்ணொளி திட்டத்தை,
முன்னாள் முதல்வர் கலைஞர்  கொண்டு வந்தார் என்பது குறித்து சமூகவலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
நீயா நானா நிகழ்ச்சியில் வடமாநில தொழிலாளி வெர்சஸ் பொது மக்கள் கலந்து கொண்டது. இதில் தமிழகம் குறித்து பெருமையாக சொல்வதென்றால் எதை சொல்வீர்கள் என கேட்டதற்கு வடமாநிலத்து பெண் ஒருவர் தமிழ்நாடு மருத்துவ காப்பீடு திட்டத்தால் அவருடைய மகனுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அதன் மூலம் வாய் பேச முடிந்ததாக நன்றியுடன் கூறியிருந்தார்.
இந்த காப்பீடு திட்டம் முன்னாள் முதல்வர் கலைஞரால்  கொண்டு வரப்பட்டது. அது போல் அவர் செய்த மருத்துவ உதவிகள் குறித்து சமூகவலைதளங்களில் கீர்த்தனா ராம் என்பவர் ஒரு நீளமான பதிவை போட்டுள்ளார்.


இந்தியாவுக்குள் எல்லை தாண்டிய ஊடுருவிய 11 இலங்கை மீனவர்கள் ஆந்திராவில் கைது- கோர்ட்டில் ஆஜர்! இந்தியாவுக்குள் எல்லை தாண்டிய ஊடுருவிய 11 இலங்கை மீனவர்கள் ஆந்திராவில் கைது- கோர்ட்டில் ஆஜர்!

கலைஞர்
அதில் கலைஞர்  கொண்டு வந்த கண்ணொளி திட்டம் குறித்து குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: 1972 ஆண்டு கண்ணொளி வழங்கும் திட்ட வரைவை சட்டசபையில் முன் வைத்து அதற்கான Blue print ஐ ரிலீஸ் பண்னுகிறார் கலைஞர்..
அப்போது தமிழ்நாட்டில் எக்கச்சக்கமான மக்களுக்கு மாலை கண் நோய்..Vitamin A குறைபாட்டால் வருவது.
ஐம்பது வயசு தாண்டிய நிறைய பேருக்கு Cataract ஆல் பாதிக்க பட்டிருக்காங்க.

கண்புரை
ஒரு ஆய்வுல சொல்றாங்க Cataract ஆல் பார்வை போன பிறகு மக்கள் வேலை இல்லாம நிறைய பேரு உணவில்லாம இறந்து போறாங்க உணவு பற்றாக்குறையின் அடிப்படையில்.. இதே அவங்களுக்கு cataract ஆபரேஷன் பண்ணி பார்வையை திருப்பி கொடுத்தா அவங்க மேலும் பத்து வருஷமாவது வேலை பார்த்து தங்கள் குடும்பத்தை பார்த்து கொள்ள கூடிய வாய்ப்பு அதிகமாகிறது என்று ஆய்வு சொல்றது .
இதன் அடிப்படியில இந்த திட்டத்தை அறிமுக படுத்திறாரு கலைஞர்.

தனியார்
ஐந்து Mobile Unitஐ உருவாக்கிறாரு . தனியார் , அரசாங்கம் எல்லாரையும் சேர்த்து ஒரு டீம், Eye Specialists, Nurses, optometrists எல்லாரையும் சேர்க்கிறார். ஐந்து மாவட்டங்களுக்கும் இந்த மொபைல் யுனிட் வருகிறது . சென்னைக்கு இரண்டு மதுரைக்கு ஒன்று . கோவைக்கு ஒன்று . தஞ்சாவூருக்கு ஒன்று என்று வருகிறது. இது ஒவ்வொரு கிராமமாக போய்கிட்டே இருப்பாங்க . இந்த மொபைல் யூனிட் வரதுக்கு முன்னாடியே அந்த ஊர்ல இருக்கிற ஊர்தலைவர்கள் வந்து யார் எல்லாம் Vitamin A குறைபாடு இருக்கு?

லிஸ்ட்
யார் யாருக்கு எல்லாம் cataract இருக்குன்னு லிஸ்ட் எடுப்பாங்க . ஒரு பள்ளிகூட வளாகமோ ஒரு கல்யாண மண்டபமோ இந்த மொபைல் யூனிட் வந்து இறங்கும்
அங்க உள்ள இருபது cataract நிபுனர்கள் வந்து ஆபரேட் செய்வாங்க. ஒவ்வொரு கேம்ப்லயும் இரண்டாயிரம் ஆபரேஷன் நடந்திச்சு. ஆயிரக்கணக்கான் மக்களுக்கு Vitamin A டிராப்ஸ் டேப்லட் கொடுத்திருத்காங்க. கண் Infectionக்கு ஐ ட்ராப்ஸ் கொடுத்திருக்காங்க.

பார்வை குறைபாடு
பிறகு பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கண்ணாடி கொடுத்திருக்காங்க. அங்கு தங்கி இருக்கும் நாட்களில் அவர்களுக்கு உணவு வழங்கி இலவசமாக அவர்களின் வீடுகளுக்கு கொண்டு போய் சேர்த்து இருக்காங்க

இதை வந்து பார்த்த அப்போதைய குடியரசு தலைவர்
வி.வி.கிரி சமூக நலத் துறையில் இந்த மாதிரி இந்தியாவில் எங்குமே நடந்ததில்லை என்று பாராட்டி விட்டு சென்றார். மேற்கு ஜெர்மனியில் இருந்து வந்த community expert டாக்டர் செர்ச்ல் பெர்க் இந்த மாதிரி ஏழை எளிய மக்களுக்கு இப்படி ஒரு திட்டத்தை உலகில் எங்குமே நடை பெறவில்லை . டாக்டர் கலைஞர் அதை நடத்தி இருக்கிறார் என்று பாராட்டு பத்திரம் வழங்கி விட்டு சென்றார். இவ்வாறு முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்தாலும் அவரது செயல்பாடுகளால் அவர் தனது ஒவ்வொரு திட்டத்தாலும் மக்களால் போற்றப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக