tamil.indianexpress.com : சேலம் தாழையூர் திமுக கிளை அலுவலகத்தில் 85 வயதான திமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இவர் இந்து எதிர்ப்புக்கு எதிராக தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் தாழையூர் திமுக கிளை அலுவலகத்தில் 85 வயதான தங்கவேல் என்ற திமுக என்ற தொண்டர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட தங்கவேல் என்ற முதுபெரும் திமுக தொண்டருக்கு ஜானகி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
தங்கவேல் சனிக்கிழமை (நவ.26) காலை திமுக கிளை அலுவலகத்துக்கு சென்று மத்திய அரசின் இந்து எதிர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என அங்கிருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு அங்கிருந்தவர்கள் கட்சி மேலிடத்திடம் பேசி முடிவெடுப்போம் எனக் கூறியுள்ளனர். இந்த நிலையில், இன்று காலை 10 மணி அளவில் 18ஆவது வார்டு திமுக கிளை அலுவலகம் வாசலில், “மத்திய அரசே மத்திய அரசே இந்தி வேண்டாம்.
தாய்மொழி தமிழ் இருக்க இந்தி கோமாளி எதற்கு? எனக் தனது கையினால் எழுதிவிட்டு உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து முதியவரின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்க நினைத்தனர். ஆனால் அதற்குள் அவர் தீயில் கருகிவிட்டார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த தங்கவேல், மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.க. கருணாநிதியின் தீவிர விசுவாசி ஆவார் என்றும் அவரின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக