வெள்ளி, 18 நவம்பர், 2022

சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க கேரள அரசு மீண்டும் முயற்சி; பா.ஜ.க. மாநில தலைவர் குற்றச்சாட்டு

தினத்தந்தி  :சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு இளம்பெண்களை அனுமதிக்க கேரள அரசு மீண்டும் முயற்சி செய்வதாக பா.ஜ.க. மாநில தலைவர் சுரேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.
சபரிமலை தரிசனத்திற்கு இளம்ெபண்களை அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதனை நடைமுறைப்படுத்தியது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரளாவில் பல இடங்களில் போராட்டம் வெடித்து வன்முறை ஏற்பட்டது. இதற்கிடையே தற்போது இதுதொடர்பான வழக்கு விசாரணை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் உள்ளது.இந்தநிலையில் சபரிமலையில் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள ைகயேட்டில், சபரிமலைக்கு வரும் அனைவரையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக கொச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் சுரேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-சபரிமலை தரிசனத்திற்கு இளம்பெண்களை அனுமதிக்க கேரள அரசு மீண்டும் முயற்சி செய்து வருகிறது. இதனை போலீசாருக்கு வழங்கியுள்ள கையேடு உறுதி செய்துள்ளது. இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இதனை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். இளம் பெண்களை அனுமதித்தால் கேரளா வில் மீண்டும் கலவரம் வெடிக்கும்.   இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக