canadamirror.com - Sulokshi : சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற 306 இலங்கையர்களை ஏற்றிய கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பழுதடைந்த நிலையில் நடுக்கடலில் தத்தளிப்பதாக தெரியவந்துள்ளது.
குறித்த கப்பலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட 306 பேர் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறித்த கப்பல் பிலிப்பைன்ஸ் இற்கும் வியட்நாமிற்கும் இடையில் தத்தளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவிற்கு சட்டவிரோத பயணம்; 300 இற்கும் அதிகமான இலங்கையர்களுடன் நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல்! | A Ship With 317 Sri Lankans Middle Sea
அவர்கள் பயணித்த கப்பல் தொடர்ந்து பயணிக்க முடியாதா நிலையில் பழுதடைந்ததால் கப்பலை செலுத்திய கப்பல் ஓட்டி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவே கப்பலை மீட்கும் பணியில் புலம் பெயர் சமூகத்தில் உள்ள சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டு கடல் படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக கனடாவில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக