சனி, 8 அக்டோபர், 2022

விருதுநகரில் காதலியை செங்கல்சூளையில் வைத்து அடித்துக்கொன்றவர் கைது!

கொலை

News18 Tamil  :   ராஜபாளையத்தில் கள்ளக்காதலியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபரை பிடித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே அயன் கொல்லங் கொண்டான் கிராமத்தில் கள்ளக்காதலியை அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கள்ளக்காதலனை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அயன் கொல்லங் கொண்டானை சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இரண்டு பேரில் ஒருவர் காவல் துறையிலும் மற்றொருவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி குடும்ப பிரச்சனை காரணமாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் உள்ளார்.


இதே பகுதியை சேர்ந்த பாப்பையன் என்பவரது மனைவி காளீஸ்வரி, கூலி தொழிலாளியாக உள்ளார். இவருக்கு கல்லூரியில் பயிலும் வயதில் மகளும், பள்ளி இறுதி ஆண்டு படிக்கும் மகனும் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக