ஞாயிறு, 23 அக்டோபர், 2022

திருப்பதி வெங்கடாசலபதி சிலை சமணர்களின் நேமி நாத தீர்த்தங்கரரின் சிலையா? ஜெயின் ஆய்வு கட்டுரை.. திரு. பால் பாட்டீல்

ராதா மனோகர்  : திரு பால் பட்டேல் (1932–2011) வழக்கறிஞர் . பிரபல எழுத்தாளர்  ஜெயின் சமூகத்தின் மிக பெரிய ஒரு ஆளுமை . இந்திய ஒன்றிய சிறுபான்மை பிரிவில் ஜெயின் மதத்தையும்  அங்கீகரிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு இவர் தொடுத்த ஒரு வழக்கின் மூலம்தான் கிடைத்தது.
மகாராஷ்ட்ரா அரசின் சிறுபான்மை நல வாரிய உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.
அனைத்திந்திய ஜெயின் அமைப்பின் பொது செயலாளராக இறுதி வரை இருந்தார்
புகழ் பெற்ற வழக்கறிஞர் சோலி சொராப்ஜி ( Soli Jehangir Sorabjee, Indian jurist who served as Attorney-General for India)   டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஜெயின் மதத்தை பற்றிய ஒரு தவறான கருத்தை எழுதியிருந்தார்  . அதை கண்டித்து பிரஸ் கவுன்சிலில் திரு பால் படேல் முறையிடடார்
அந்த கருத்துக்கு தான் மன்னிப்பு கேட்பதாக வழக்கறிஞர் சோலி சொராப்ஜி அறிவித்தார்

திரு பால் பாட்டீலை பற்றி பல செய்திகளை கூறலாம் . இவர் பற்றி நான் இங்கே எழுதுவதற்கு ஒரு முக்கிய காரணமாக திருப்பதி வெங்கடாசலபதி கோயிலின் சமண வரலாறு இருக்கிறது
திருப்பதி கோயில் சமணர்களின் நேமி நாத தீர்த்தங்கரரின் கோயில் என்ற கருத்தை இவர் கொஞ்சம் ஆதாரத்தோடு எழுதியிருந்த கட்டுரை என்னை ஈர்த்தது
இவரின் அந்த ஆங்கில கட்டுரையின் சாராம்சத்தை கொஞ்சம் தமிழில் தந்துள்ளேன்
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இவரின் ஆங்கில கட்டுரையை வேறொரு பிளாக்கில் மீள்பதிவு செய்திருந்தேன் . அது அவரின் கண்களுக்கு எட்டி என்னை பாராட்டி எழுதி இருந்தார்  நானும் நன்றியும் அன்பும் தெரிவித்து பதில் அளித்திருந்தேன்  
சில ஆண்டுகளுக்கு பின்பு அவர் காலமானதாக அறிந்தேன்   
இந்த மீள்பதிவில் அமரர் திரு பால் பட்டேலுக்கு எனது புகழாஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன்
 

திரு .பால் பாட்டீல்  :  திருப்பதி - வெங்கடாசலபதி என்கின்ற பாலாஜி கோயில் ஒரு  திராவிட நாகரிக  சமணக் கோவில்.
இது முதலில் சமண கோயிலாக இருந்தது  8 ஆம் நூற்றாண்டில் ராமானுஜாச்சாரி மற்றும் சங்கராச்சாரிகளின் பக்தி இயக்கத்தின் மூலமாக  இது ஒரு வைணவ கோயிலாக மாற்றப்பட்டது
எட்டாம் நூற்றாண்டில் இருந்து பத்தாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இந்த  திரிபு நடந்துள்ளது

இந்த கோயிலில் உள்ள பாலாஜி சிலை அதன் முழுமையான தோற்றத்தை மக்கள் பார்க்கா வண்ணம் ஆபரணங்களால் மறைத்து மூடப்பட்டுள்ளது.

திருப்பதி பாலாஜி சிலையை  பல சமயங்களில் நகைகள் இல்லாமல் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள்
 இது சமணர்களின்  நேமிநாத தீர்த்தங்கரர் சிலை என்று பல பார்ப்பனர்களே நம்புகிறார்கள்,.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், நேர்மையான வரலாற்றாசிரியர்கள் இது ஒரு சமண கோவில் என்பதை நிரூபித்துள்ளனர்.
திருப்பதி பாலாஜி கோவிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள்,
ஆனால் இந்த கோவிலை பற்றிய உண்மை யாருக்கும் தெரியாது.
இது உண்மையிலேயே ஒரு திராவிடக் கோயில், இது ஜெயின் கோயில் என்று தொல்லியல் துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 ராமானுஜம் மற்றும் சங்கராச்சாரியாரால் ஆயிரக்கணக்கான  பிற சமண பௌத்த கோயில்கள் சைவ வைணவ கோயில்களாக மாற்றம் செய்யப்பட்டதை பல பார்ப்பனர்கள் அறிவார்கள்

வெங்கடேசப் பெருமாள் என்ற பெயரில் ஒரு  கடவுள் இருந்ததாக எந்த வரலாற்றாசிரியரும் கூற முடியாது.
 இந்தியாவின் தென் பகுதியில் உள்ள எந்தவொரு பழைய கோயிலும் முதலில் ஒரு சமண கோயில் அல்லது பௌத்த கோயிலாக இருந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது.

தொல்லியல் துறையின் மூத்த அதிகாரிகள் இந்த உண்மை தெரிந்தாலும் அரசியல் ஆதிக்கம் காரணமாக இது பற்றி அதிகமாக  கருத்து தெரிவிக்கவில்லை.
 

திராவிட மக்கள் ஆரியர்களைப் போல ஒரு சண்டைக்காரர்களாக இல்லாத காரணத்தாலும் அவர்களின் இயல்பான உபசார பண்பினாலும்  இந்தியாவிற்கு வந்த ஆரியரின் தந்திரத்தில் ஏமாந்து   இந்த கோயில்களை பறி கொடுத்தார்கள்

 இன்றைய திருப்பதி பாலாஜி கோவில் அனைத்து பக்தர்களுக்கும் சொந்தமான அற்புதமான கோவில் என்பதை ஏற்று கொள்கிறோம்.
அது இன்றிருக்கும் நிலையிலேயே அது தொடர்ந்து இருக்கலாம்
ஆனால் குறைந்தபட்சம் அதன் உண்மையான வரலாறும்  அடையாளமும் மக்களுக்கு தெரியவேண்டும்

இந்து கோயில்களில் எல்லாம் பெரும்பாலான கடவுள்களின் அபிசேகம் பொது பார்வையில் செய்யப்படுகிறது,  ஆனால் திருப்பதியில் அப்படி அல்ல.

 திருப்பதியின் சடங்குகள் பொதுமக்களின் பார்வைக்கு திறந்திருக்க வேண்டும்.

திருப்பதி வெங்கடேஸ பெருமாளின்  முகத்தை ஏன் மறைக்க வேண்டும்.
ராமர், கிருஷ்ணர், சிவபெருமான், பிரம்மா, விநாயகர் ஆகியோரின் எந்த முகமும் மறைக்கப்படாத போது,

திருப்பதி வெங்கடாசலபதி முகத்தை  மட்டும்  ஏன் பெரிய உலோகத்தாலான  நாமத்தை போட்டு மறைக்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா?

நம் கடவுள் சைவராகவோ வைஷ்ணவராகவோ அல்லது சமணராகவோ கூட இருக்கட்டும், ஆனால் அது அனைவருக்கும் திறந்திருக்க வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம்.

திருப்பதி பூசாரிகள் பூஜைகளையும், அபிஷேகங்களையும் வெளிப்படையாகச் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்,

திரைச்சீலைகள் அல்லது கதவுகளை மூடிக்கொண்டு மறைக்க வேண்டாம்.

கடவுளை தனிப்பட்ட முறையில் ரகசியமாக வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை..

சமணக் கோவிலில் இருந்து இந்து மத கோயிலாக மாற்றப்பட்டு, புனையப்பட்ட,  அவதாரங்களில் பெயர் சூட்டப்படும்போது, ​​அத்தகைய கோயில்களில் மட்டுமே கடவுளின் அடையாளம் மறைக்கப்படுகிறது.

கோயிலின் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்துமாறும்,
அந்த சிலையின்  முழு முகத்தையும் தோரணையையும் காட்டும்படி  கோயில் அதிகாரிகளிடம் கோருகிறோம்!
 

செயற்கையான கைகள், முகம் மற்றும் பிற பாகங்கள் இல்லாமல் உண்மையான புகைப்படம் எடுக்க முடியுமா?
காலங்காலமாக திராவிட வரலாறு சிதைக்கப்பட்டு, சமூகம்  அரசாங்கத்தின் பொறுப்பு என்று கூறப்பட்டு சில ஆதிக்க சக்திகளின் நலன்களுக்குக்காக இந்த நாடகம் நடக்கிறது

ஆரியர்கள், இந்தியாவில் குடியேறியவர்கள். தொல்லியல் துறையின் மூத்த இயக்குநரும், அவரது உதவியாளருமான டாக்டர் சாந்தலிங்கம், மற்றும் ASI ஆய்வு செய்து வெளியிடாத பல  உண்மைகள் உள்ளன.

தெற்கில் உள்ள ஒவ்வொரு பழமையான கோயிலும் ஒரு காலத்தில் சமண பௌத்த கோயில்களாக  இருந்தன. அவை தற்போது  செயற்கையாக உருவாக்கப்பட்ட வெவ்வேறு அடையாளங்களுடன் அறியப்படுகிறது,

Dr . Bal  Patel    : TIRUPATI - BALAJI- IS A JAIN TEMPLE OF DRAVID CIVILIZATION.
WORLD'S RICHEST TEMPLE – THIRUMALAI - TIRUPATI - BALAJI- LORD VENKATESHWARA IS A JAIN TEMPLE OF DRAVID CIVILIZATION.
This is originally a Jain temple converted by Ramanujam/Sankaracharya around 8th century A.D onwards along with 1000s other dravid temples.
.Complete idol is covered to hide its original identity. Balaji has been photographed on many occassions without Jewellary and it is found to be a Jain Standing Tirthankara Neminath which many brahmins believe and admit. Archaelogical scientists, honest historians have proved this to be a Jain temple.
Millions of people visit Balaji temple but no one know reality about this temple. It is truly a Dravid temple, which is confirmed by Archaelogical department as Jain temple. Many brahmins silently believe and agree that it is originally Jain temple converted by Ramanujam and Sankaracharya as 1000s of other dravid Jain temples converted, rechristened by Avatar philiosophy. No Historian can ever claim that there was any god by name Lord Venkateshwara.
Many historians world wide believe - any given old temple in southern part of India is originally a Jain temple. However it may have changed its name. Archaeological Senior officers (who chose not to comment much due to political dominance ) firmly believe that originally complete dravid population was Jain who were not fighters like aryans, and believers of Ahimsa, whose heritage was stolen by cunning aryans who came to India around 3500 years ago. For example Thirukural was product of dravid civilization ( written by Jain Saints) but later it was labelled as Hindu literature at the time Hinduism was not known with its present name around 1st century B.C.when sacrifice of animals and vaidic religion was in vogue.

To conclude Tirupati balaji temple is wonderful temple belonging to all devotees, it can be run the way it is going. But at least its true history and identity has to be made known.
Most of gods elsewhere in Hinduism whose abhisekham is performed in public view, same way Tirupati's rituals need to be done in open with public view. As we all believe god are not property of brahmins alone, but they belong to devotees.
Why Tirupati Lord venkateshwara's face has to be hidden. When no face of Lord Rama, Lord Krishna, Lord siva, Lord brahma, Lord Ganesha are hidden. This looks quite weird hiding face of god to mislead its real identity.
We would all love to have our god let it be Brahmin or Jain , it has to be in open for everyone.
Let us ask those brahmins to perform all pooja, abhisekham openly, not to hide with curtains or by closing doors. There is absolutely no need to keep God in private if this is real .
This is one of reason only 2 % of complete structure is visible to devotees, which doesn't happen with Lord Krishna, Lord Rama, Lord Hanuman, Lord Ganesha in other parts of India. God's identy is hidden only in such temples when temple would have been converted from Jain temple and their naming is done on fabricated, non-historical avatars.
Can we request temple authorities to reveal its true identity and to see full face and posture of god Can we have real photograph without artificial projected hands, face and other parts.
From ages Dravid history has been mutilated, wrongly potrayed by so called responsbile vested interests of society, politics and even government. It is Aryans whose history, mythology and wrong facts are superimposed over dravid history, who were immigrants to India. Dr Santhalingam, senior director of Archaelogical survey and his assistant, and ASI has unpublished researched facts which clearly state that , Every old temple in south was once jain temple, presently known with different identity created by brahmins, few such examples out of 1000s of dravid jain temples converted to Brahmin temples are:
, Every old temple in south was once samana /jain temple budhdha  presently known with different identity created by brahmins, few such examples out of 1000s of dravid jain temples converted to Brahmin temples are:
1) Madurai Meenakshi temple
2) Kanchipuram kamakshi temple (Kanchipuram has more than 100 temples)
3) Varadaperumal temple ( kanchipuram)
4) Thiruvanmalai Arunachalam temple
5) Mylapore kapaliswara temple
6) Nagaraja temple nagercoil
7) Thirumala Balaji temple, ( total resemblance to thirumalai jain temple in Arni district)
Dr. Santhalingam expressed that due to political circumstances these facts cannot be disclosed or published, but facts remain same. He also said Thiruvalluvar was a Jain saint who wrote the famous Tamil classic Thirukural He has done enough research but unable to publish same.Even Tamil was evolved from Dravid Jain civilization born out of Brahmi language. Enough evidences are avaialable from epigraphyAccording to him Aryan Brahims invaded jain temples and converted them as their source of livelihood.
______________________________________________________________________________
* Secretary-General, All India Jain Minority Forum, New Delhi,
Ex-Member, Media Expert Committee, Govt. of India,
Ex- Member, Maharashtra State Minority Commission, Govt.of Maharashtra, Mumbai.
Ex-President, National Society for Prevention of Heart Disease & Rehabilitation,
Co-Author: JAINISM (Macmillan Co 1974). with Colette Caillat, (Member Institut de France, Paris,) & A.N.Upadhye, (ex-President, All-India Oriental Conference,) Author: SUPREME COURT'S VOLTE FACE ON CONSTITUTIONAL AMENDMENT (Published by Govt. of Maharashtra, 1980) Author:Jaya Gommatesa! Foreword by C.Caillat (Publisher :Hindi Granth Karyalay, 2006, Mumbai) My translation of Dr.L. Alsdorf’s German Beitraege zur Geschichte von Vegetarismus und Rinderverehrung in Indien is presently being edited for publication by Dr. Bollee, Indologist. My translation of Dr.Asdorf's French Les Etudes Jaina, Etat Present et Taches Futures is published by Hindi granth Karyalay, (2005) Mumbai. as The Jaina Studies Present State and Future Tasks edited by Dr.Willem Bollee. Participant and speaker in the 7th Jaina Studies Workshop on Jaina Law and Jaina Community, Centre for Jaina Studies, SOAS, University of London, & Dept of Indic Religion, Centre for Theology and Religious Studies, University of Lund. Participated and presented a paper on the Evolution of Sramanic Jain Tradition and Its Impact on Indic Civilisation & Religious Fundamentalism in the XIXth World Congress of the International Association for the History of Religion, Tokyo, Japan, 2005.
Patil Estate, 278, Tardeo Road, Mumbai-400007,
Tel:91 22 2386 1068, Fax: 91 22 23893030, Cell: 98692 55533
Website: http://jaina.in
Email: balpatil [at] globaljains [dot] com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக