வெள்ளி, 7 அக்டோபர், 2022

ஸ்ரீ ல ஸ்ரீ ஆறுமுக நாவலரின் ஒரிஜினல் போட்டோ வெளியானது

 வரலாற்றை திரிக்காதீர் .. அமரர் ஆறுமுக நாவலரின் உண்மையான புகைப்படம் இதுதான்.
நாவலரின் படம் என்று கற்பனையில் ஒரு ஓவியத்தை வரைந்து உலாவ விட்டுளார்கள் சில அதிமேதாவிகள்
இந்த ஓவியத்தை ஒட்டியே சிலையும் செய்து வழக்கம் போல வழிபடுகிறார்கள்
ஒரு வரலாற்று ஆவணம் ஏன் மறைக்கப்படுகிறது?
ஒருவேளை அந்த அசல் புகைப்படம் அவரின் மேன்மையை குறைப்பதாக கருதுகிறார்களோ?
நாவலரின் ஓவியம்  வழக்கமான சைவப்பெரியார்கள் போன்ற மேக்கப்களோடு இருக்கிறது
உண்மைக்கு மேக்கப் தேவை இல்லை
உண்மையை உண்மையாகவே பொதுவெளிக்கு முன்வைக்க வேண்டும்
அது எந்த செய்தியை சொல்கிறது என்பதை மக்களிடமும் காலத்திடமும் விட்டுவிடுவோம்
நாவலரின் ஒரிஜினல் புகைப்படத்தை இனியும் இருட்டடிப்பு செய்தல் நேர்மையல்ல .  இந்த ஒரிஜினல் போட்டோவை பொதுவெளிக்கு கொண்டுவந்த தோழர் அனஸ்லிக்கு Annesley Ratnasingham  நன்றியும் வாழ்த்துக்களும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக