திங்கள், 10 அக்டோபர், 2022

நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வருகிறார் ..ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று விரைவில்

%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%21

hirunews.lk  : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்புக்கு இணங்க நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பொருளாதாரம் மற்றும் சமூக ஸ்திரத்தன்மை ஆகியவற்றை கட்டியெழுப்புவதற்காக வழங்கக் கூடிய பங்களிப்பு தொடர்பாக ஆராய்வதற்காகவே அவர் நாட்டுக்கு வரவுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோர்வேயின் ராஜதந்திரியான எரிக் சொல்ஹெய்ம், இலங்கைக்கான நோர்வேயின் வௌிவிவகார ஆலோசகராக கடந்த 2000 ஆம் ஆண்டு நோர்வே அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார்.

இலங்கை அரசாங்கம் மற்றும்  புலிகள் இயக்கத்திற்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் ஏற்பாட்டாளராக செயற்பட்டு தனது பங்களிப்பை வழங்கியிருந்தார்.
அந்த காலகட்டத்தில் அவரின் செயற்பாடுகளுக்கு தென்னிலங்கையில் சிங்கள பிரதான அரசியல் கட்சிகள் எதிர்ப்பை வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவர் தற்போது ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளராக செயற்பட்டு வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக