திங்கள், 24 அக்டோபர், 2022

தெற்காசியாவின் டிஸ்னிலாண்ட் இலங்கையில் அமைகிறது .. ஹம்பாந்தோட்டையில்

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%21+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%21

hirunews.lk : இலங்கையில் டிஸ்னிலேண்ட்! ஆராய்வதற்காக இலங்கை வரும் குழு!
தெற்காசியாவின் முதல் டிஸ்னிலேண்டை ஹம்பாந்தோட்டையில் திறப்பது குறித்து ஆலோசிக்க டிஸ்னிலேண்டின் குழு ஒன்று எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு வரவுள்ளது.
சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் வேவால்ட் டிஸ்னியின் அழைப்பைத் தொடர்ந்து 18 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டிற்கான திட்டங்களைப் பற்றி விவாதிக்க டயானா கமகே விரைவில் அமெரிக்காவிற்கு விஜயம் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இலங்கையில் டிஸ்னிலேண்ட்டை அமைக்க அழைப்பு விடுத்து வோல்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு ராஜாங்க அமைச்சர் கடிதம் எழுதியிருந்தார்.
இதனையடுத்தே ஹம்பாந்தோட்டையில் ஒரு பிராந்திய டிஸ்னிலேண்ட் அமைப்பதற்கான நிதி சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக நவம்பர் மாத இறுதியில் இலங்கைக்கு வரவுள்ளதாக டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக