ஞாயிறு, 30 அக்டோபர், 2022

நாங்கள் சொல்வதை கேட்க வேண்டும்! காபியோ, சாப்பாடோ கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்!.. தமிழ்நாட்டு ஊடகங்களுக்கும் பாஜகவின் செய்தி

 வி.சி. வில்வம் :  பாஜக, ஆர்.எஸ்.எஸ், ஹெச்.ராஜா, அண்ணாமலை போன்றோரின் ஆதிக்க மனநிலை எப்படியானது தெரியுமா?
"தினமும் பத்திரிகையாளர்கள் எங்களைச் சந்திக்க வேண்டும். நாங்கள் சொல்வதை வாய் மூடி கேட்க வேண்டும்! காபியோ, சாப்பாடோ கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்!
அதை மீறிய செய்திகளையோ, எங்கள் மீது விமர்சனம் தொடுக்கும் கேள்விகளையோ கேட்டால் நாயே, பேயே என்போம்,
சிலுப்ப நினைத்தால் குரங்கே என்போம்! அதையும் மீறினால் வேசி ஊடகம் என்போம். உங்களால் எதுவும் செய்ய முடியாது. மீண்டும் அடுத்த நாள் எங்களிடம் தான் நிற்க வேண்டும்!
"பத்திரிகையாளர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது", என்பார்கள்!
இந்த "ஜிகால்டி" வேலையெல்லாம் எங்களிடம் செல்லாது! பெரும்பாலான ஊடக உரிமையாளர்கள் எங்கள் வசம்! நீங்கள் வேலை பார்க்கும் சாதாரண ஊழியர்!
உங்களிடம் தனித்திறமை இருக்கலாம்; பல்லாண்டு அனுபவம் இருக்கலாம்;


எங்கள் செயல்களால் உங்களுக்குக் கோபம் வரலாம்; சுயமரியாதை உணர்வு வாட்டி வதைக்கலாம்! என்ன இருந்து என்ன பயன்?
திராவிடர் இயக்கத் தமிழ்நாட்டில் நீங்கள் பெருமைமிகு மனிதராக இருந்திருப்பீர்கள்! இப்போது பாஜக, ஆர்.எஸ்.எஸ் நாங்கள் நுழைகிறோம்! எங்களிடம் அமைதியான அடிமையாக இருந்து விட்டுப் போங்கள்! மீறினால் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள்! எங்களுக்கும், உங்கள் உரிமையாளர்களுக்குமான ஒப்பந்தத்தை நீங்கள் அறியமாட்டீர்கள்."
இவ்வாறான ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் எழுதப்படாத சட்டம் தான் நடைமுறையில் இருந்து வருகிறது.
பத்திரிகைத்துறை மட்டுமின்றி, கல்வித்துறை, காவல்துறை உள்ளிட்ட ஒட்டு மொத்த சமூகமும் மாற்றி அமைக்கப்படலாம்.
"தமிழ்நாடு நலமாக இருக்க வேண்டும்!" என நினைக்கிற அத்தனைத் தலைவர்களும் ஒன்றிணைவது காலத்தின் அவசியத் தேவை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக