Shadagopan Ramiah : ஒரு மகா விருட்சத்தின் மறைவு.....
மலையகத்தின் எழுத்து இமயமும் மலையகத்தின் தேசிய அடையாளமுமான தெளிவத்தை ஜோசப் என்ற மகாவிருட்சம் மறைந்தது
1980 களில் நாவலப்பட்டி என்ற சிறு நகரத்திலிருந்து தன்னந்தனியாக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு வந்த எனக்கு முதல் முதலில் அறிமுகமானவர் அந்தனி ஜீவா .அவர் மூலமாக சிறுகதை எழுத்தாளர் சுபையர் இலங்கீரண் அறிமுகமானார். அதன்பின் எனக்கு படிப்படியாக தெளிவத்த ஜோசப் , பிரேம்ஜி ஞானசுந்தரம் , ராஜஸ்ரீ காந்தன், சோமகாந்தன் போன்றவர்கள் அறிமுகமானவர்கள். இவர்கள் அனைவரையும் விடவும் என்னில் மிகவும் ஒட்டிக் கொண்டவர் தெளிவற்றை ஜோசப் அவர்கள் தான் . அதற்கு காரணம்
அவர்களையும் சேர்த்துக் கொண்டோம்.
அவை வெறுமனே இலக்கிய பயணங்கள் அல்ல. சிறுகதை தொடர்பான பயிற்சி பட்டறைகள் . கருத்தரங்குகள் . இளம் மாணவர்கள் மத்தியில் எவ்வாறு படைப்பாற்றலிலை வளர்த்தெடுப்பது, மலையக மக்கள் தொடர்பான ஆய்வரங்கங்கள் , இப்டி எங்கள் வழியில் பல பெரும்பணிகள் வந்தன . இவற்றில் கலந்து கொண்டதற்கு அப்பால் நாங்கள் மேற்கொண்ட கொண்டாட்டங்கள் சொல்லும் தரம் அன்று . அவை மனதிருக்கும் வரை நினைவில் இருக்கும்
அன்பில் ஒரு சிறு வயது இளைஞன் தெய்வத்தை ஜோசப் மலையாளத்திற்கு அப்படி என்ன செய்துவிட்டார் என்ற ஒரு கேள்வியை எழுப்பி இருந்தான்
அவனுக்கு நான் அளித்த பதிலின் ஒரு பகுதி பின்வருமாறு :-
2 ) " தோட்டக்காட்டான் " என்ற கேவலமான பெயரை சுமந்துகொண்டு "காட்டான் " பரம்பரையில் இருந்து வந்த காடுவெட்டி களனி அமைத்த பெருமை கொண்டவர்கள் நாம் . இன்று " மலையக தமிழன் " என்று வீறு கொண்டு எழுந்து நிற்கிறோமே அதற்கு பாதை அமைத்துக் கொடுத்தவர்கள் யார்.....?
3 ) 1960 களுக்கு முன் உங்களுக்கு இலக்கியமே இருந்ததில்லை என்று கேவலமாக சொன்னவர்களுக்கு தமிழகத்தின் 3000 ஆண்டு கால இலக்கிய வரலாற்றின் தொடர்ச்சி நாங்கள் என்று பதில் அளித்தவர்கள் நாங்கள்..... இலங்கையில் கடந்த 200 ஆண்டுகளாக வாய்மொழி இலக்கியமான நாட்டார் பாடல்களையும் , கூத்துக்களையும் , நாடகங்களையும் சுமந்து வந்தவர்கள் நாங்கள் . உங்கள் கண்கள் திமிர்த் தனத்தால் குருடாகிப் போனதால் அவைகள் உங்களுக்கு தென்படுவதில்லை......?
4 ) அந்தளவுக்கு செழுமையான இலக்கியங்களை தூசி துடைத்து.... தோள்மீது சுமந்து கொண்டு வந்து உங்களிடம் ஒப்படைத்து இருக்கிறோமே...
இதனை வேறு யார் செய்திருக்க கூடும்....?
5 ) மலையக சிறுகதை வரலாற்றை எழுதினால் அதில் 90 சதவீதம் தெளிவத்தைக்கு சொந்தமானது...
நாவல்களுக்கும் வேறு இலக்கிய வடிவங்களுக்கும் எந்தக் குறையையும் வைக்கவில்லை....
6 ) 1963 ஆம் ஆண்டு மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் நிறுவப்பட்டது முதல் இன்றுவரை எத்தனை பயிற்சிப் பட்டறைகள் , பாசறைகள் , சிறுகதை கவிதை போட்டிகள் , ஞாபகார்த்த நிகழ்வுகள் , எவ்வளவு இளம் எழுத்தாளர்களுக்கு விருதுகளும் பரிசுகளும் வழங்கி இருப்போம்..... மலை நாட்டு எழுத்தாளர் மன்றம் என்ற பதாகையின் கீழ் எத்தனை எழுத்தாளர்கள் உருவாகி இருக்கிறார்கள்....? நான் உள்ளடங்கலாக.....
7 ) மலையக கதைக்கனிகள், கலையொளி முத்தையா பிள்ளை வெளியீடுகள், வீரகேசரி வெளியீட்டகம், துரை விஸ்வநாதனின் துரைவி பதிப்பகம், மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் வருடாந்த சிறுகதை கவிதை போட்டிகள் , எழுத்தாளர் ஞாபகார்த்த நிகழ்வுகள் இப்படி எம் இலக்கிய வரலாற்றில் வந்த மைல் கல்கள்.... ? எத்தனை ..... எத்தனை.....?
8 ) ஆதலால்....... நாம் கடந்து வந்த பாதையில் எத்தனை பள்ளங்களையும் மேடுகளையும் சிகரங்களையும் கடந்து வந்திருக்கிறோம் என்பதை திரும்பிப்பார்த்து , இன்னும் எத்தனை உச்சிகளையும் உயரங்களைத் தொட வேண்டும் என்று சிந்திப்பவனால் மட்டுமே வானத்தில் ஏற முடியும். வரலாற்றை தேடிப் படித்து தெரிந்து கொள்ளாதவனால் புதிய வரலாற்றை படைக்க முடியாது.....
தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு என் சிரம் தாழ்த்திய வணக்கஙகள......
இரா. சடகோபன்,
செயலாளர் ,
மலைநாட்டு எழுத்தாளர் மன்றம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக