திங்கள், 3 அக்டோபர், 2022

புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் கைது .. போராட்டத்தில் ஈடுபட்ட

மாலை மலர்  :  புதுச்சேரி:   புதுவையில் மின்துறை தனியார் மயமாக்கத்தை கண்டித்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 5-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.
ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் புதுவையில் மின் தடை தொடர்கதையாக இருந்து வருகிறது.
புதுவையில் நகர் மற்றும் கிராமப் புறங்களின் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது.
நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் இரவு வரை மின்சாரம் தடைபட்டதால் மாநிலம் முழுவதும் இருளில் மூழ்கியது.
இதை கண்டித்து தீப்பந்தம் ஏந்தியும், தடைகளை ஏற்படுத்தியும் பல இடங்களில் பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இரவு 9 மணிக்கு மேல் ஒவ்வொரு பகுதியாக மின்வினியோகம் சீரமைக்கப்பட்டது.
5-வதுநாளாக மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டதால் அந்தந்த பகுதியில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மின்துறை ஊழியர்களால் மின்வெட்டு ஏற்படுமானால் மத்திய அரசின் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தின் (எஸ்மா) கீழ் நடவடிக்கை பாயும் என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை துணை ராணுவம் மற்றும் போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக