சனி, 1 அக்டோபர், 2022

ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டமும் தமிழக பெண் உரிமை மற்றும் மனித உரிமை போலிகளும்

 

ஸ்டீபான் ஸ்மித்   : ஈரானில் பெண்களுக்கு எதிராக  அரச பயங்கரவாதம் கொடூரமாக தலைவிரித்து ஆடுகிறது
இது பற்றி  தமிழ் மனித உரிமை பேச்சாளர்கள் மற்றும்  பெண் உரிமை பேச்சாளர்கள் கடும் மௌனவிரதம் கடைப்பிடிக்கிறார்கள்.
இந்த விடயத்தில் குரல் கொடுக்க உங்களை  எது தடுக்கிறது?
உங்களின் மௌனம் காவி சங்கிகளின் வளர்ச்சிக்கு உதவும் என்பதை மறவாதீர்கள்.
பச்சை சங்கிகளுக்கு ஸலாம் போடுவதுதான் உங்கள் விருப்பம் என்றால் நீங்கள் இந்த கணமே செல்லாக்காசாகி விட்டீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்
பெரியார் அம்பேத்கர் சேகுவேரா லெனின் என்றெல்லாம் நீட்டி  ஜோக் அடிக்காதீர்கள் .
அவர்களை விட்டுவிடுங்கள்    
ஈரானில் ஒவ்வொரு நாளும் எத்தனை  பெண் உரிமையாளர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பது சரியாக தெரியவில்லை
இந்த  ஹடிஸ் நஜாஃபி என்பவர் சமூக ஊடகங்களில் பிரபலமானவர்
இவர் ஹிஜாப் எதிர்ப்பு நடவடிக்கைகளை பொதுவெளியில் மேற்கொண்டார்   இவரை ஈரானின் கொலைகார காவலர்கள் சுட்டு கொன்றுவிட்டார்கள்


சுட்டு கொல்லப்பட்ட ஹடிஸ் நஜாஃபியின்  ஹிஜாப் எதிர்ப்பு காட்சிகளை இந்த வீடியோவில் பார்க்கலாம்  ஹடிஸ் நஜாஃபியின் வீடியோ இணையத்தில் வைரலான சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.
வைரலான வீடியோவில், அவர் தனது துடைக்கப்படாத தலைமுடியைக் கட்டியிருப்பதைக் காண முடிந்தது, . ஹதீஸ் நஜாஃபி யார்?  இந்த வீடியோவைப் பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக