வியாழன், 27 அக்டோபர், 2022

1998 கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள பாட்சா மகன் கார் வெடித்த சம்பவத்தில் கைது

தந்தி டிவி  :  கோவை  கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில், அல் உம்மா தீவிரவாத இயக்க தலைவர் பாட்ஷாவின் உறவினர் கைதாகி உள்ளார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் கைதாகியுள்ள 5 பேரில் ஒருவர் முகமது தல்கா.
இவரது தந்தை நவாப் கான், தடை செய்யப்பட்ட அல்-உம்மா அமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்தவர். தற்போது கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்,
கோவை குண்டு வழக்கில் தொடர்புடைய அல் - உம்மா இயக்க தலைவர் பாட்ஷாவின் சகோதரர்.
இந்த நிலையில், தற்போது கைதான முகமது தல்காவின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


செகன்ட் ஹேண்ட் காரை வாங்கி விற்கும் முகமது தல்கா தான்,
சிலிண்டர் வெடித்த காரை ஜமேஷா முபீனுக்கு வாங்கி தந்தது தெரிய வந்துள்ளது.
சதி செயலுக்காக கார் வாங்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் முகமது தல்காவின் தந்தை நவாப் கான், கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து பரோலில் வந்தபோது யாரை எல்லாம் சந்திதார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக