Rishvin Ismath : மிகப் பொருத்தமான நடவடிக்கை, ஆனால் முழுமையான நடவடிக்கை அல்ல. ஜனநாயக விரோத கிலாபத் சிந்தனைக்கு எந்த தேசத்திலும் இடம் கொடுக்கக் கூடாது!
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களை சோதனையிடுவதும், ஒரு சிலரை கைது செய்து தடுத்து வைப்பதும் போதுமான நடவடிக்கை அல்ல,
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் ஜமாத்தே இஸ்லாமியின் துணை அமைப்புகள்,
பினாமி அமைப்புக்கள், இரகசிய கிளை அமைப்புக்களை முற்றாகத் தடை செய்ய வேண்டும்.
ஜமாத்தே இஸ்லாமியை தடை செய்யாமல் இலங்கை விட்ட தவறை இந்தியா செய்யக் கூடாது.
ஜமாத்தே இஸ்லாமி போன்ற, மெளதூதியக் கருத்துக்கள் கொண்ட, கிலாபத் கருத்துக் கொண்ட, யூஸுப் அல் கர்ளாவி போன்ற சர்வதேச பயங்கரவாத ஊக்குவிப்பளர்களுடன் தொடர்பில் உள்ள அனைத்து அமைப்புக்களும் தடை செய்யப் படுவதே முஸ்லிம்களும், மற்ற மக்களும் நிம்மதியாக வாழ்வதற்கான வழியாகும்.
இலங்கையில் ஜமாத்தே இஸ்லாமி, ஜமியத்துஸ் ஸலமா, உஸ்தாத் மன்சூர் எனப்படும் அக்குரணை மன்சூர் மெளலவி ஆகியோர் யூஸுப் அல் கர்ளாவியுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டவர்கள் ஆவார்கள். இவர்கள் இஸ்லாமிய கிலாபத்தை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்கள், கடந்த காலங்களில் ஜிஹாதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியதில் தொடர்பு பட்டவர்கள்.
.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக செல்வச் செழிப்புடன் வாழும் அரபு நாடுகளில் பேசப்பட முடியாத கிலாபத், ஜிஹாத் கொள்கைகளைப் பேசும், அதற்கு ஆதரவு அளிக்கும் அமைப்புக்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய அமைப்புக்கள், அவற்றின் கிளை அமைப்புக்கள், பிணாமி அமைப்புக்கள் இலங்கை, இந்தியாவில் மட்டுமல்ல, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு போன்ற முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளிலும் தடை செய்யப்படல் வேண்டும். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மட்டுமின்றி ஜமாத்தே இஸ்லாமி, SDPI போன்றவையும் தடை செய்யப்பட வேண்டும். அத்துடன் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் வலதுசாரி இந்துத்துவா அமைப்புக்கள் குறித்தும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், அவையும் தடை செய்யப்பட வேண்டும்.
.
முஸ்லிம்களையும், மற்றவர்களையும் வன்முறையில் இருந்து காப்பாற்றும் விதமாக தற்போது வரையான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ள NIA இற்கு பாராட்டுக்கள். முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக மாறக் கூடாது என்ற அடிப்படையில் முஸ்லிம் நலனில் உண்மையாகவே அக்கறை உள்ளவர்கள் இந்த நடவடிக்கையை வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக