புதன், 7 செப்டம்பர், 2022

பெங்களூரு வெள்ளம் - கோடீஸ்வரர்களின் வீடுகளையும் பதம் பார்த்த வெள்ளம்.. படகில் மீட்கப்பட்ட தொழிலதிபர்கள்!

tamil.goodreturns.in  -  Tamilarasu J  :  கடந்த வாரம் பெங்களூர் நகரில் வரலாறு காணாத மழை பெய்தது என்பதும் 75 ஆண்டுகளில் இல்லாத மழை கொட்டி தீர்த்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
பெங்களூரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பெங்களூர் நகரமே கிட்டத்தட்ட மூழ்கியது என்பதும் இதனால் பெங்களூர் நகர மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பு ஏற்பட்டது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் சாதாரண பொதுமக்கள் மட்டுமின்றி பெங்களூரு நகரில் வாழும் கோடீஸ்வரர்களும் இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடீஸ்வரர்களின் பங்களாக்களும் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்ததை அடுத்து அவர்கள் படகுகளில் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.பெங்களூரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை, இந்தியாவின் சொந்த சிலிக்கான் பள்ளத்தாக்கில் வசிப்பவர்களின் வாழ்க்கையை முற்றிலும் அழித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மட்டுமின்றி பணக்காரர்களும் இயற்கையின் பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.

உயர்நிலை குடியிருப்பு
பெங்களூரு நகரத்தின் உயர்நிலை குடியிருப்பு பகுதிகளும் கனமழைக்கு விதிவிலக்கல்ல என்பதை இயற்கை தெளிவுபடுத்தியுள்ளது. பெங்களூரின் கோடீஸ்வரர்களான விப்ரோ தலைவர் ரிஷாத் பிரேம்ஜி, பிரிட்டானியா தலைமை நிர்வாக அதிகாரி வருண் பெர்ரி போன்ற தொழிலதிபர்கள் வசிக்கும் பகுதிகளும் வெள்ளத்திற்கு தப்பவில்லை. அதேபோல் பைஜு ரவீந்திரன், பிக் பாஸ்கட் இணை நிறுவனர் அபினய் சௌதாரி போன்ற தொழிலதிபர்களின் வீடுகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது.

உயர்நிலை குடியிருப்பு
பெங்களூரு நகரத்தின் உயர்நிலை குடியிருப்பு பகுதிகளும் கனமழைக்கு விதிவிலக்கல்ல என்பதை இயற்கை தெளிவுபடுத்தியுள்ளது. பெங்களூரின் கோடீஸ்வரர்களான விப்ரோ தலைவர் ரிஷாத் பிரேம்ஜி, பிரிட்டானியா தலைமை நிர்வாக அதிகாரி வருண் பெர்ரி போன்ற தொழிலதிபர்கள் வசிக்கும் பகுதிகளும் வெள்ளத்திற்கு தப்பவில்லை. அதேபோல் பைஜு ரவீந்திரன், பிக் பாஸ்கட் இணை நிறுவனர் அபினய் சௌதாரி போன்ற தொழிலதிபர்களின் வீடுகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது.

இயற்கை பேரழிவு
இயற்கையானது ஏழை, பணக்காரர் பேதமின்றி நம் அனைவரையும் ஒரே மாதிரியாக பார்க்கிறது என்பதற்கு பெங்களூரு கனமழை ஒரு மிகச்சிறந்த உதாரணம். கோடீஸ்வர்களின் ஆடம்பர மாளிகைகள் ஒரே இரவில் நீரில் மூழ்கி நிலமாக மாறிவிட்டது. அதனால் அதில் குடியிருந்த கோடீஸ்வரர்கள் படகுகளில் மீட்கப்பட்டனர். பெங்களூரில் கடந்த ஞாயிறு இரவு பெய்த இடைவிடாத மழையால் பல கோடி மதிப்புள்ள பணக்காரர்களின் வீடுகள் தண்ணீர், மின்சாரம் இல்லாமல் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கோடீஸ்வரர்களின் வீடுகள்
பெங்களூரில் கோடீஸ்வரர்கள் வசிக்கும் பகுதியில் ரூ.10 கோடி முதல் ரூ.80 கோடி மதிப்பிலான ஆடம்பர வீடுகள் உள்ளன. இந்த ஆடம்பரமான மாளிகைகளும் மூழ்கிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

கௌரவ் முன்ஜால்
அனாகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி கௌரவ் முன்ஜால் மாளிகை வெள்ளத்தில் மூழ்கியதால், அவர் தனது குடும்பம் மற்றும் செல்ல நாயை அழைத்து கொண்டு டிராக்டரில் வெளியேறும் வீடியோவை பகிர்ந்துள்ளார். "எனது குடும்பம் மற்றும் செல்லப்பிராணியை, நீரில் மூழ்கியுள்ள எங்கள் வீட்டில் இருந்து வெளியேற்றி டிராக்டரில் அழைத்து சென்று கொண்டிருக்கின்றேன். நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தயவுசெய்து அனைவரும் கவனமாக இருங்கள்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார். மேலும் யாருக்காவது ஏதாவது உதவி தேவைப்பட்டால் தன்னை அணுகுமாறும் முன்ஜால் மக்களை கேட்டு கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக