வெள்ளி, 9 செப்டம்பர், 2022

டாடா - ஆப்பிள் ஒப்பந்தமா.. தமிழ்நாட்டில் உற்பத்திக்கு வாய்ப்பு..!!

சென்னையில் உற்பத்தியா?

tamil.goodreturns.in - Pugazharasi S :  டெல்லி: டாடா நிறுவனம் சார்பில் ஆப்பிள் செல்போனுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, இந்தியாவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களில் ஆப்பிள் 14 மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்யவுள்ளதாக கூறப்படும் நிலையில், டாடாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்பிள் போனின் பெரும்பாலான உற்பத்தியானது சீனாவில் செய்யப்பட்டு வந்த நிலையில், சீனாவில் இருந்து தனது உற்பத்தியினை செய்யத் தொடங்கியுள்ளது.
ஆப்பிள் ஐபோன் உற்பத்தி


ஆக இந்தியாவில் விரைவில் ஆப்பிள் ஐபோன் உற்பத்தியானது தொடங்கப்படலாம் என்றும் தெரிகிறது. இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்துடன் இது குறித்தான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாடாவுடன் பேச்சு வார்த்தை
ஆப்பிள் நிறுவனம் ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான் மற்றும் பெகட்ரான் உள்ளிட்ட நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் தனது இருப்பை வலுப்படுத்த டாடா குழுமத்துடன் பேச்சு வர்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தனது ஆலையை தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஸ்ட்ரான் - ஆப்பிள்
ப்ளூம்பெர்க் அறிக்கையின் படி, ஆப்பிளின் முக்கிய சப்ளையர்களில் ஒருவரான தைவான் (விஸ்ட்ரான்), டாடா குழுமத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது. இது தயாரிப்பு மேம்பாடு, சப்ளை சங்கிலி மற்றும் அசெம்பிளி ஆகியவற்றில் விஸ்ட்ரானின் அனுபவத்தினை டாடா குழுமம் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது.

சென்னையில் உற்பத்தியா?
டாடா நிறுவனம் தொழிற்சாலையை தங்கள் மாநிலத்தில் தொடங்க வேண்டும் என கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது.. எனினும் இது தமிழ் நாட்டில் சென்னையில் தொடங்கப்படலாம் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகின.

சீனாவில் சவால்கள்?
சீனாவில் தற்போது பல சவால்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக தைவான் - சீனா இடையேயான பிரச்சனை நிலவி வருவது, இதன் காரணமாக சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் என பல காரணிகளுக்கு மத்தியில் இந்த மாற்றமானது இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சீனாவில் போடப்பட்ட ஜீரோ கோவிட் பாலிசி காரணமாக, அங்கு பொருளாதாரத்திலும் வீழ்ச்சி காணத் தொடங்கியுள்ளது. இது தொழிற்சாலைகளில் உற்பத்தியினை பாதித்துள்ளது. இதனால் ஆப்பிள் உள்ளிட்ட பல ஆலைகளும் உற்பத்தியில் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன.

சென்னையில் உற்பத்தியா?
சீனாவின் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சப்ளை சங்கிலியிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த உற்பத்திக்கு தேவையான பொருட்களை தென் இந்திய நகரமான சென்னையில் உள்ள ஐபோன் ஆலைக்கு அனுப்படலாம் என்றும், இதன் மூலம் சென்னையில் அசெம்பிளிங் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ கருத்துகள் எதுவும் வெளியாகவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக