காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை தேர்வு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடக்க உள்ளது.
இந்த தேர்தலில் சோனியா, ராகுல் காந்திக்கு நெருக்கமான ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் ராகுல் காந்தி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. \அதாவது காங்கிரஸ் தலைவர் பதவியிலும் தனது ஆதரவாளர் இருப்பார். இன்னொரு பக்கம் ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கும் சச்சின் பைலட்டை கொண்டு வந்து.. அங்கு நிலவி வந்த பிரச்சனையையும் தீர்க்க முடியும் என்று நம்பினார். ஆனால் இப்போது ராஜஸ்தான் அரசியலில் புதிய குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
ஈகோ.. சச்சின் பைலட் வேண்டாம்! அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள்
என்ன நடக்குது?
காங்கிரஸ் கட்சி ரூல்ஸ்படி அங்கு ஒரு தலைவருக்கு ஒரு பதவிதான். அப்படி இருக்கும் போது அசோக் கெலாட் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆனால்.. முதல்வராக அவர் நீடிக்க கூடாது.இதற்கு நேரடியாக அசோக் கெலாட் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. ஆனால் மறைமுகமாக அவர் இன்னும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தனது ஆதரவு எம்எல்ஏக்களை தூண்டிவிட்டு தலைமைக்கு அழுத்தம் கொடுக்கிறார் என்று கூறப்படுகிறது. இவர் முதல்வராகவும் இருக்கட்டும்.. தேசிய தலைவராகவும் இருக்கட்டும் என்று ராஜஸ்தான் எம்எல்ஏக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அசோக் கெலாட்
எம்எல்ஏக்கள் இப்படி போர்க்கொடி தூக்குவதற்கும்.. தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அசோக் கெலாட் கூறி விட்டார். இருந்தாலும் அவர்தான் சச்சின் பைலட்டுக்கு எதிராக எம்எல்ஏக்களை தூண்டி விடுகிறார் என்று கூறப்படுகிறது. அசோக் கெலாட் தேசிய அரசியலுக்கு வந்தால்.. சச்சின் பைலட்டை ராஜஸ்தான் முதல்வராக்கி பிரச்னையை சரி செய்யலாம் என்று காங்கிரஸ் நினைத்தது. ஆனால் நான் முதல்வர் ஆக இல்லை என்றாலும் பரவாயில்லை.. சச்சின் பைலட் ஆகிவிட கூடாது என்பதில் அசோக் கெலாட் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.
கோபம்
அசோக் கெலாட் மற்றும் அவரின் ஆதரவாளர்களின் இந்த செயலால் சோனியா, ராகுல் காந்தி அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் மல்லிகார்ஜுன கார்கே இது பற்றி அசோக் கெலாட்டிடம் பேசி இருக்கிறார். ஆனால் அசோக்.. என் கையில் எதுவும் இல்லை. எம்எல்ஏக்கள் என் மீது உள்ள பாசத்தில் இப்படி செய்கிறார்கள் என்று கழன்றுகொண்டதாக தெரிகிறது. உங்களை நம்பி தேசிய தலைவர் பதவியை கொடுக்கிறோம்.
தியாகம்
இதற்காக நீங்கள் சில தியாகங்களை செய்ய வேண்டும். மொத்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் உங்கள் கைக்கும் வர உள்ள நிலையில்., ஒரு மாநிலத்தில் போய் நீங்கள் இப்படி விட்டுக்கொடுக்காமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று அசோக் கெலாட் மீது சோனியா, ராகுல் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரிடம் இன்று மேலிடத்தில் இருந்து விளக்கம் கேட்கப்படும் என்று கூறப்படுகிறது. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையில் இருக்கிறார் என்பதால் அவரால் நேரில் வர முடியவில்லை. கேசி வேணுகோபால் மூலம் போனில் பேசித்தான் இவர்கள் ஆலோசனைகளை செய்து வருகின்றனர்.
ஒரு மூத்த தலைவர்.. தேசிய காங்கிரசுக்கு தலைவராக வாய்ப்பு உள்ளவர் இப்படி ஈகோ பிரச்சனையால் எம்எல்ஏக்களை தூண்டி விடுவதை சோனியா, ராகுல் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக