Rishvin Ismath : இதுதான் இந்து மதம்... இதுதான் சாதி வெறி... நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 522119 வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக சாதிவெறி பிடித்த மனிதனால் நிகழ்த்தப்பட்ட சாதிய வன்மமும், அவமானப் படுத்தப் படுதலும் - இந்திய ஜனநாயகமும், சட்டமும் தொடர்ந்தும் குருடாயிருக்குமா?
ஒரு தொழிலுமே செய்யாமல், மேல் சட்டை கூடப் போடாமல் காவியைச் சுற்றிக் கொண்டு தன் சாதி அடையாளத்தை மண்டை மீது ஏற்றி வைத்துக் கொண்டு உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே தின்று கழியும் சாதி வெறி பிடித்த தோல் தடித்த பூரி சங்கராச்சாரியாரான மஹாபாக் சரஸ்வதி எனும் அயோக்கியன்,
பொதுமக்களின் 522119 வாக்குகளைப் பெற்ற மக்கள் பிரதிநிதியின் தலையோ, மூச்சுக் காற்றோ தன் காலில் கூடப் பட்டுவிடக் கூடாது என்று பதறிப் போய்த் தன் காலைத் தூக்கி இருக்கின்றான், காரணம் அவன் உயர்ந்த சாதியாம், நாடாளுமன்ற உறுப்பினர் தாழ்த்தப்பட்டவராம்.
.இவ்வாறெல்லாம் இன்றைக்கும் நடக்கும் பொழுது பாதிக்கப்படும், அவமானப்படுத்தப்படும் மக்களை 'தவிச்ச முயல் அடிப்பது போல' இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்ய பெரிதாக கஸ்டப்படவா வேண்டும், சொல்லுங்கள்? ஜிஹாதிய பயங்கரவாதியாக மாற்றுவதற்கு வேண்டுமானால் கஸ்டப்பட்டு முயற்சி செய்ய வேண்டி இருக்குமே தவிர மற்றப்படி "எங்கள் மதத்தில் ஏற்றத் தாழ்வு இல்லை, அனைவரும் சமம்" போன்ற நான்கைந்து பச்சைப் பொய்களைச் சிரிக்காமல் சொல்லி இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்ய பெரிதாகக் கஸ்டப்படத் தேவையே இல்லை.
..
ராம்சங்கர் கதேரியா தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் மட்டுமல்ல, கான்பூர் பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்று, ஆக்ரா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி, மத்திய அரசில் மனிதவள மேம்பாட்டு அமைச்சராக பதவி வகித்தவர், 522119 வாக்குகளைப் பெற்றவர், இவ்வளவு இருந்தும் என்ன, கொஞ்சம் கூட சுயமரியாதை, பகுத்தறிவு, சுயசிந்தனை இல்லாமல் யாரோ ஒருத்தன் காலில் விழப் போன அந்த அடிமைப் புத்திக்காக தற்பொழுது அவமானப் பட்டுக் கூனிக் குறுகி, பொய் சொல்லி நிற்க வேண்டிய இழி நிலைக்கு ஆளாகியுள்ளார்.
..
ஊடகங்களுக்கு முன்னாலேயே இவ்வளவு கேவலமாக அவமானப் படுத்தப்பட்டும் சூடு, சொரனை, தன்மானம் கொஞ்சமும் இல்லாத பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் ராம்சங்கர் கதேரியா "அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இதை நான் வன்மையாகக் கண்டிப்பதோடு, இதையெல்லாம் தவறாகக் காட்டும் இத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோருகிறேன்." என்று முழுப் பூசணிக்காயை ஒரு தட்டு சோற்றில் மறைக்க முற்பட்டுள்ளார். "இப்பிடி ஒரு மானங்கெட்ட பொழைப்பு தேவையா?" என்று அவருக்கு வாக்களித்த மக்கள் யாராவது அவர் சட்டையைப் பிடித்துக் கேட்க மாட்டார்களா என்று தோன்றுகின்றது.
..
நாடாளுமன்ற உறுப்பினர் ராம்சங்கர் கதேரியா கேவலப் படுத்தப் பட்டது சங்கராச்சாரியாரோடு சக மனிதனாக சமனாக உட்காரப் போனபொழுது அல்ல, மாறாக காலில் விழப் போனபோதுதான் என்பதை அழுத்தமாகக் கவனிக்க வேண்டும். வாக்குகள் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ராம்சங்கர் கதேரியாவை தன் காலில் விழுவதற்குக் கூட தகுதியில்லாத கேவலமான ஒரு ஜந்துவாகவே பூரி சங்கராச்சாரியார் பார்க்கின்றான். இங்கேதான் இன்னொரு பெரியாரின் தேவை அழுத்தமாக உணரப் படுகின்றது, அதனை கி.வீரமணியாலோ, பெரியாரின் சிலைகளினாலோ செய்துவிட முடியாது, மாறாக இன்றைய காலத்தின் மேம்படுப்பட்ட சிந்தனைகளுடனான புதியதொரு பெரியாரின் தேவை அழுத்தமாக உணரப் படுகின்றது.
-றிஷ்வின் இஸ்மத்
28.08.2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக