ராதா மனோகர்
: இலங்கை சுதந்திரம் அடைந்த காலக் கட்டத்தில் உணவு உற்பத்தியில் மிகவும் பின்தங்கி இருந்தது
இப்போது இருக்கும் பெரும்பாலான குடியேற்றத்திட்டங்கள் அப்போது இருக்கவில்லை
அரிசி தட்டுப்பாடு பயங்கரமாக இருந்தது அன்று இந்தியாவின் உணவு உற்பத்தியும் மிக மோசமான நிலையிலேயே இருந்தது இந்த பின்னணியில் இலங்கையின் அரிசி தேவையில் சீனாவின் பங்களிப்பு என்னவாக இருந்தது என்று தெரிந்து கொள்வது நல்லது
அன்று சீனா மாவோ தலைமையில் அமைந்த ஒரு தீவிர கம்யூனிச தேசமாக கருதப்பட்டது பல நாடுகள் சீனாவை அங்கீகரிக்கவே இல்லை
அன்று இலங்கையின் அரிசி தேவையை நிறைவு செய்யகூடிய ஒரு நிலையில் சீனா இருந்தது . இலங்கையின் ரப்பர் சீனாவுக்கு தேவையாக இருந்தது
ஆனால் அமெரிக்க பிரிட்டன் இந்தியா உட்பட பல நாடுகள் இலங்கை சீனாவோடு ஒரு வியாபார ஒப்பந்தம் செய்ய முயலும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்காத நிலைமை இருந்தது ..
இந்த பின்னணியில் இருந்து ரப்பர் அரிசி டீல் பற்றி தெரிந்து கொள்வது நல்லது
ஆசியா டைம்ஸ் : 1952 October 4 இல் இலங்கை அரசு மிகவும் துணிச்சலாக சீனாவுடன் ரப்பர்-அரிசி பண்டமாற்று ஒப்பந்தம் செய்து கொண்டது
இலங்கை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும் ஒவ்வொரு டன் ரப்பருக்கும் இலங்கைக்கு ஆறு டன் அரிசி கிடைக்கும்,
இது அன்றைய சந்தை விலையை விட இரண்டு மடங்காக இருந்தது.
அன்றைய வர்த்தக அமைச்சராக இருந்த திரு ஆர் ஜி சேனநாயகவுடன் இணைந்து இதை சாதித்த பிரதமர் திரு டட்லி சேனநாயக்காவிற்கு இதற்குரிய பாராட்டு வழங்கப்பட வேண்டும்.
அந்த நேரத்தில் இலங்கை சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தவில்லை,
எனவே பர்மாவை தளமாகக் கொண்ட சீனா மற்றும் இலங்கை தூதர்கள் பண்டமாற்று ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக, இலங்கை அரசாங்கம் 1952 செப்டம்பரில் சீனாவிற்கு வர்த்தகப் பிரதிநிதிகளை அனுப்பியது.
ஆர் ஜி சேனாநாயக்க தலைமையில் சென்ற குழு இலங்கை சார்பாக
அக்டோபர் 4 அன்று தற்காலிக ரப்பர்-அரிசி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
ஆரம்ப தயக்கம் மற்றும் எதிர்ப்பிற்குப் பின்பு ,
நவம்பர் 23 அன்று பர்மாவிலுள்ள இலங்கைத் தூதுவர் சுசந்த டி பொன்சேகா தலைமையில் பீக்கிங்கிற்கு சென்ற இரண்டாவது தூதுக்குழு டிசம்பர் 18 அன்று இறுதி ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டது.
இந்த ஒப்பந்தம் ஜனவரி 1, 1953 இல் நடைமுறைக்கு வந்தது.
ஆனாலும் கூட பல ஆண்டுகளாக.இலங்கை சீனாவிற்கு ரப்பர் விற்பதை பிரிட்டனும் அமெரிக்காவும் எதிர்த்தே வந்தன
கொரியப் போரின் விளைவாக அமேரிக்கா பிரிட்டன் ஆகிய இருநாடுகளுக்கும் சீனாவுடன் ஒரு நட்புறவு இருக்கவில்லை.
கம்யூனிச சீனாவுடனான ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா தொடர்ந்து கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துகொண்டே வந்தது
அமெரிக்கா இலங்கைக்கு எதிரான கடுமையான ஒரு போக்கை கடைப்பிடித்தது
ஏனைய மேற்கு நாடுகளின் இலங்கைக்கான உதவியையும் கணிசமாக கட்டுப்படுத்தியது
இலங்கைக்கு பல பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் தடை விதித்தது.
சீனாவுடன் இலங்கைக்கு ஒப்பந்தம் இருந்தபோதிலும் பிரதமர் டட்லி சேனநாயக்க சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தவில்லை
மற்றும் மேற்கத்திய சார்பு வெளியுறவுக் கொள்கையை தொடர்ந்தார்.
ஜூன் 1953 இல், டட்லி சேனநாயக்கா இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் பங்கேற்றார்.
லண்டனில் இருந்த அவர், இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடற்ற தமிழர்கள் தொடர்பான பிரச்சனைகள் குறித்துப் பேசினார்
நாடு திரும்பிய பிரதமர் டட்லி சேனநாயக்க, உணவு மானியத்தை விலக்கிக் கொண்டு, இந்தப் பணத்தில் ஒரு பகுதியை நாட்டின் வளர்ச்சிக்காகத் திருப்பும் துணிச்சலான முடிவை எடுத்தார்.
1953-54 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு, ஜூலை 23, 1953 அன்று, நிதியமைச்சர் ஜே ஆர் ஜெயவர்த்தனவினால் பிரதிநிதிகள் சபையில் இந்த செய்தி கோடிட்டுக் காட்டப்பட்டது.
உணவு மானியத்தை குறைக்கும் நடவடிக்கையில், மானியம் இழப்பால் ரேஷன் அரிசியின் விலையை 25 காசுகளில் இருந்து 75 காசுகளாக உயர்ந்தது
சர்க்கரையின் விலையும் அதிகரிக்கும் நிலை உண்டானது
இந்த மானிய நிறுத்தம் நாட்டில் மிக பெரிய கலவரத்திற்கு வழிவகுத்தது
இதை எதிர்த்து மதவாச்சி எம்பியும் அமைச்சருமான திரு மைத்திரிபால சேனாநாயக்கவின் இராஜினாமாவிற்கு வழிவகுத்தது.
திரு. எஸ் டபிள் யு ஆர் டி பண்டாரநாயக்கா தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் SLFP இணைந்தார்.
உடனே இடதுசாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஹர்த்தால் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர்.
அது வன்முறையாக மாறி, ஆகஸ்ட் 12, 1953 அன்று அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி, நாடு முழுவதும் வேகமாகப் பரவத் தொடங்கிய கலவரங்களையும், சீர்கேடுகளையும் அடக்க அரசாங்கம் வலுவான நடவடிக்கைகளை எடுத்தது....
SRI LANKA: THE UNTOLD STORY
Chapter 15: Turbulence in any language
By K T Rajasingham
..... Despite Brazil's legal restrictions, rubber seeds were smuggled to England in 1876. This resulted in the seedlings being sent to Ceylon, and later to many tropical regions, especially to Malaya, Java, Sumatra and Thailand, thus beginning the enormous East Asian rubber plantation industry. Plantations were so carefully cultivated and managed that the Amazon rubber industry lost ground. American rubber companies subsequently enlarged their plantation holdings in Liberia and in South and Central America.
The expansion of rubber production in Ceylon only began in the 20th Century. In 1900, less than 2,000 acres were under rubber, but by 1910 it had risen to almost 150,000 acres.
Dudley Senanayake, when he was the Minister of Agriculture and Lands, opened up the Tea Research Institute, the Talawakele Rubber Research Institute at Agalawatte and the Coconut Research institute at Lunuwila.
After the general elections of 1952, when the price of rubber declined in the international market, Dudley Senanayake, the new premier, was suddenly saddled with a stagnant economy. Following the end of the World War II in 1945, the price of rubber dropped to Rs 1 per pound. With the impact of synthetic rubber, the price dropped further to a low of 46 cents per pound. During the Korean War, the price began to pick up with the entry of China into the war. Ceylon sold a large quantity of rubber to China.
Ceylon took a bold step by entering into a rubber-rice barter agreement with China. Ceylon was to get six tons of rice for every ton of rubber exported to China, which was double the current market price in those days. Credit must go to Dudley Senanayake, along with R G Senanayake, the cousin of the prime minister, who was the Minister of Trade and Commerce.
At the time Ceylon had not established diplomatic ties with China, so the ambassadors of China and Ceylon based in Burma negotiated the barter agreement. As a follow-up, the Ceylon government sent a trade delegation to China in September 1952. It was led by R G Senanayake and left on September 14. The minister clinched the deal on behalf of Ceylon and on October 4 a provisional rubber-rice agreement was signed. After initial hesitancy and opposition, a second mission left for Peking, led by Susantha de Fonseka, Ceylon's Ambassador in Burma, on November 23, and a pact was signed on December 18. The agreement came into force on January 1, 1953 and Ceylon benefited immensely for years from the agreement.
Britain and the United States protested against Ceylon selling rubber to China. The US strongly objected to the deal with communist China because relations between the two powers were at a low as a result of the Korean War. America invoked the Battle Act and stopped a substantial portion of its aid to the country. It also placed an embargo on the export of several items to Ceylon.
Despite the agreement, though, Dudley Senanayake did not establish diplomatic relations with China and continued with his pro-Western foreign policy.
In June 1953, Dudley Senanayake participated in the coronation ceremony of Queen Elizabeth II. While in London he talked with Jawaharlal Nehru, the Indian premier, about issues connected with stateless Tamils of the Indian origin.
On his return, Dudley Senanayake took the courageous decision to withdraw the food subsidy and divert some of this money to the development of the country. The budgetary proposal for the year 1953-54 was outlined in the House of Representatives, on July 23, 1953 by J R Jeyawardene, the Minister of Finance. In moving to reduce the food subsidy, the minister set off a chain reaction as the loss of the subsidy meant an increase in the price of rationed rice from 25 cents to 75 cents a measure, and also an increase in the price of sugar.
The removal brought about an explosive situation which led to the resignation of Maitripala Senanayake, who was a Parliamentary Secretary (Junior Minister) and the Member of Parliament representing Madawadchchiya electorate. The Jaffna-educated (at St John's College, Jaffna) Maitripala Senanayake, crossed over to the opposition and joined the SLFP, led by Bandaranaike.
Immediately, the Marxist parties seized the opportunity and announced a hartal general work stoppage. It turned out to be a violent one and on August 12, 1953 the government declared a state of emergency and took strong measures to quell riots and disorder, which had begun to spread rapidly all over the country.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக