செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இலங்கையில் 50 புதிய எரிபொருள் நிலையங்கள் அமைக்க இலங்கை அரசு அனுமதி

tamil.goodreturns.i  - Pugazharasi S  : இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழலுக்கு மத்தியில், அங்கு பல்வேறு பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகின்றது. குறிப்பாக உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகின்றது.
இதற்கிடையில் இலங்கையில் லங்கா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், 50 புதிய எரிபொருள் நிலையங்களை தொடங்குவதற்கு இலங்கை அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் போது, இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டினை தீர்ர்க்க இது ஏதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை தற்போது 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டு வருகின்றது.
அன்னிய செலவாணி கையிருப்பு சரிவால் பெரும் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாமல் தவித்து வருகின்றது. குறிப்பாக உணவு பொருட்கள், மருந்து பொருட்கள், எரிபொருள் என எதையும் செய்ய முடியாமல் தவித்து வருகின்றது.

இலங்கையில் இன்றும் லங்கா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம், முக்கிய எரிபொருள் விற்பனையாளராக இருந்து வருகின்றது. ஏற்கனவே இலங்கையில் 216 எரிப்பொருள் மையங்களை கொண்டுள்ளது. இதற்கிடையில் தற்போது மேற்கொண்டு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 2 பில்லியன் ரூபாயினை தீவு நாட்டில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமே LIOC ஆகும். இது கொலம்பிய பங்கு சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் நாங்கள் இந்த திட்டத்தினை திட்டமிட்டுள்ளோம்,. இது இலங்கைக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். இது இலங்கையில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் மிக பயனுள்ள ஒன்றாகவும் இருக்கும்.

இலங்கையின் மிகப்பெரிய எரிபொருள் விற்பனையாளரான சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் டுமார் 1190 எரிபொருள் மையங்களை கொண்டுள்ளது.

சமீபத்தில் இலங்கைக்கும் LIOCக்கும் இடையேயான முக்கியமானசேமிப்பு கிடங்கு சம்பந்தமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, LIOCன் விரிவாக்கமானது வந்துள்ளது.

கடந்த 2 மாதங்களாகவே அங்கு பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் மக்கள் பல மணி நேரம் காத்திருந்து எரிபொருள், வாங்கி செல்லும் நிலையை பார்க்க முடிகிறது. இதற்கிடையில் எரிபொருள் விற்பனையை இலங்கை அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியத்திடமும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றது. சீனா மற்றும் ஜப்பானிடமும் உதவி கோரியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக